உலகளவில், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் மற்றும் இளம் மக்களை பாதிக்கும் ஒரு கணிசமான சமூக பிரச்னையாக குழந்தைகளில் செய்யப்படும் பாலியல் துஷ்பிரயோகம் இருக்கிறது. இது, எல்லா குழந்தைகளும் இல்லாமல், அநேக குழந்தைகளுக்கு, அவர்களின் வயது வரும் பருவம் வரைக்கும் தொடரக் கூடிய ஒரு பரந்த அளவிலான உளவியல் மற்றும் நடத்தை பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். இத்தகைய நிகழ்வுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எது அதிக சாத்தியமான நன்மையை அளிக்கும் என்பதை அறிவது முக்கியமாகும். பாலியல் துஷ்பிரயோகத்தால் குழந்தைகளில் ஏற்பட்ட எதிர்மறை விளைவை குறைப்பதற்கு புலனுணர்வு-நடத்தை சிகிச்சை (காக்னிடிவ் பிஹேவியரல் தெரபி, சிபிடி) அணுகுமுறைகள் உதவுமா என்பதை அறிய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டது. இந்த திறனாய்வின் சேர்க்கை அளவைகளை 847 குழந்தைகள் பங்குபெற்ற பத்து ஆய்வுகள் சந்தித்தன. ஆய்வுகளின் அறிக்கைகள் மோசமாக இருந்தன, மற்றும் ஆய்வு தரத்தில் குறிப்பிடத் தகுந்த பலவீனங்கள் இருப்பதாக தோன்றின. முடிவுகள் பொதுவாக மிதமானவையாக இருந்தாலும், மனச்சோர்வு, சம்பவத்திற்கு-பின்னான மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றோடு, குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தின் விளைவுகள் மீது சிபிடி ஒரு நேர்மறையான தாக்கத்தை கொண்டிருக்கக் கூடும் என்று ஆதாரம் பரிந்துரைக்கிறது. விளைவுகள், நடைமுறை மற்றும் மேற்படியான ஆராய்ச்சிக்கு கருத்தில் கொள்ளப்படுகிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.