தன் மதிப்பு கூட்டுவது இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளில் பொதுவாக காணப்படும் உளவியல் மற்றும் நடத்தை பிரச்சினைகள் வளர்வதை தடுக்க உதவலாம். உடற்பயிற்சிகள் உடற்சார்ந்த நலத்திற்கு பயன் தரும் என்று கூற வலுவான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் மனநலத்தின் மேல் உடற்பயிற்சிகளின் தாக்கத்தை பற்றிய ஆதாரங்கள் மிக குறைவு. இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளின் தன் மதிப்பு கூட்டலில் உடற்பயிற்சியானது நேர்மறையான, குறுகிய கால பயன் அளிக்கும் என்று ஆய்வுகளின்மூலமான திறனாய்வு பரிந்துரைப்பதோடு, குழந்தைகளின் தன் மதிப்பை மேம்படுத்தும் முறைகளில் உடற்பயிற்சி ஒரு முக்கிய காரணியாகும் என முடிவு செய்கிறது. இருப்பினும், இந்த திறனாய்வின் ஆய்வாளர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் சிறிய அளவிலானவை என்று குறிப்பிட்டு, மேலும் நன்கு வடிவமைத்த ஆய்வுகளின் தேவையை ஒத்துக்கொண்டனர்.
மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு