காக்ரேனின் இந்த திறனாய்வு சுருக்கத்தில், கீல்வாதத்திற்கு முழு இடுப்புமாற்று அறுவைசிகிச்சையில் பின்பக்க அல்லது பக்கவாட்டு முறையை பயன்படுத்துவதன் விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்து நாங்கள் என்னென்ன தெரிந்து கொண்டுள்ளோம் என தெரியப்படுத்தப் பட்டுள்ளது. இந்த திறனாய்வு காண்பிப்பது:
இடுப்பு கீழ்வாதமுள்ளவர்களுக்கு,முழு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பின்பக்கம் (posterior) அல்லது பக்கவாட்டு (lateral) அணுகுமுறை சிறந்ததா என்று உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை.
இடுப்பு கீல்வாதம் என்றால் என்ன? மற்றும் மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் எத்தனை வகைகள் உள்ளன?
வாதங்களின் வகையில் மிக அதிக அளவில் காணப்படுவது கீல்வாதம் (OA)ஆகும். சிலருக்கு, இடுப்பு மூட்டு சேதம் மற்றும் வலி அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு கடுமையாக இருக்கலாம். அவ்வாறு உள்ளவர்களுக்கு, மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு முழு இடுப்பு மூட்டுக்கு பதிலாக ஒரு செயற்கை மூட்டு பொருத்தலாம்.
மொத்த இடுப்பு மாற்று அறுவையில் , சிகிச்சை செய்யும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பின்பக்கத்தில் இருந்து அல்லது பக்கவாட்டில் இருந்துஅறுவையை மேற்கொள்வர். அறுவை சிகிச்சைக்குப் பின் நடப்பதில் பிரச்சினைகள் குறைவாக இருக்கலாம் என்னும் நம்பிக்கையில் பின்பக்க அணுகுமுறை நல்லது என்று சில அறுவை சிகிச்சைமருத்துவர்கள் கருதுகிறார்கள். பக்கவாட்டு அணுகுமுறை நரம்பு சேதம் ஏற்படுவதற்குக் குறைவான வாய்ப்பு மற்றும் இடுப்பு மூட்டு நழுவல் (dislocation) ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளதாக சில அறுவை சிகிச்சைமருத்துவர்கள் நம்புகிறார்கள். இடுப்பு இடப்பெயர்தல் வலியை உண்டுபண்ணும்; அதன் காரணமாக மக்கள்இடுப்பினை பழைய நிலைக்கு கொண்டுவர மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள நேரிடலாம்.
இந்த திறனாய்வின் முடிவுகள் என்ன?
பின்புறம் (இடுப்பின் பின்புறமாக) அல்லது பக்கவாட்டு (இடுப்பின் பக்கவாட்டில்) அணுகுமுறை வழியாக மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆராய்ச்சிகளில் பங்குபெற்று இருந்தனர்.
மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு பின்பக்கம் மற்றும் பக்கவாட்டு அணுகுமுறையினால் உண்டாகும் நன்மைகள்
:
பின்பக்க அணுகுமுறை பக்கவாட்டு அணுகுமுறையை விட இயக்க வரம்பை (range of motion) மேம்படுத்த கூடும்
செயல்பாடு அளவு பின்பக்க மற்றும் பக்கவாட்டு அணுகுமுறைகள் இரண்டிலும் அதே அளவு மேம்படலாம்
எனினும் இந்த நன்மைகளை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை.
மொத்த இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு:
பின்பக்க மற்றும் பக்கவாட்டு அணுகுமுறையினால் உண்டாகும் தீங்குகள்.
பின்புறம் அல்லது பக்கவாட்டு அணுகுமுறைகளில், இடுப்பில் மூட்டு நழுவல் (dislocation) உண்டாகும் வாய்ப்பு ஒரேயளவில் இருக்கலாம்
நடப்பதில் ஏற்படும் சிரமங்களில் பின்புறம் அல்லது பக்கவாட்டு அணுகுமுறை இரண்டிலும் வேறுபாடுகள் இல்லை
நரம்பு சேதம் பக்கவாட்டு அனுகுமுறையை விட பின்பக்க அணுகுமுறையில் குறைவாக இருக்கும்.
என்றாலும் இந்த தீங்குகளை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை.
மொழிபெயர்ப்பாளர்: சி.இ.பி.என்.ஆர் குழு