முழங்கால் கீல்வாத சிகிச்சைக்காக எலும்பினை வெட்டு அறுவை சிகிச்சை (Osteotomy)

காக்ரேன் ஒருங்கிணைவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கீல் வாதம் உள்ளவர்களின் மூட்டுகளில் எலும்பு வெட்டு அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு மதிப்பாய்வை நடத்தினர். இது தொடர்பாக நவம்பர் 2013 வரை நடத்தப்பட்டுள்ள அனைத்து ஆய்வுகளையும் தேடியதில், அவர்கள் 1065 நபர்களை உள்ளடக்கிய 21 ஆய்வுகளை கண்டறிந்தனர். இவர்களின் கண்டுபிடிப்புகளின் சுருக்கம் பின்வருமாறு.

முழங்கால் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இந்த ஆய்வு காண்பிப்பதாவது:

. வலி மற்றும் செயல்பாட்டு திறனை எலும்பு வெட்டு சிகிச்சை (osteotomy) மேம்படுத்தலாம், ஆனால் இது அந்தந்த சிகிச்சைக் குழுக்களிலேயே உள்ள வேறுபாடுகளை பொருத்தது. எந்த ஆய்வும் எழும்பு வெட்டு சிகிச்சையையும் வழக்கமான சிகிச்சையையும் ஒப்பிட்டதில்லை; மற்றும்
• எந்த ஒரு எலும்பு வெட்டு சிகிச்சை உத்தியும் சிறந்ததாக இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை.

கீல்வாதம் என்றால் என்ன மற்றும் எலும்பு வெட்டு (osteotomy) சிகிச்சை என்றால் என்ன?
கீல்வாதம் என்பது முழங்கால் அல்லது இடுப்பு போன்ற மூட்டுகளைத் தாக்கும் நோயாகும். குருத்தெலும்பை மூட்டு இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பைச் சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து இந்நிலையை சரி செய்வதற்குப் பதிலாக, மோசமடையச் செய்கிறது. உதாரணமாக, எலும்பானது உருவிழந்து, மூட்டுவலியையும், மற்றும் ஸ்திரமற்ற மூட்டையும் உண்டாக்கும். இது உடல் செயல்பாட்டை பாதிக்கும்; அல்லதுமுழங்கால் மூட்டினை பயன்படுத்தும் திறனை பாதிக்கும். முழங்காலில் கீல்வாதம் உள்ள நோயாளிகளுக்கு முழங்கால்மூட்டு மாற்று, மற்றும் எலும்பு வெட்டு அறுவை சிகிச்சை (osteotomy) ஆகிய இரண்டு முக்கிய வகையான அறுவை சிகிச்சை முறைகள், அளிக்கப்படுகிறது.

ஏலும்பு வெட்டு அறுவை சிகிச்சையில் எலும்புகள் வெட்டப்பட்டு மறு வரிசைப்படுத்தப்படும். முழங்கால் மூட்டைச் சுற்றிய எலும்பு வெட்டு (Osteotomy) அறுவைச் சிகிச்சை முழங்கால் மூட்டின் அமைப்பை (alignment) மாற்றுகிறது. எடை தாங்கல் முழங்காலின் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒரு ஆரோக்கியமான பகுதிக்கு மாற்றப்படும். பழுதடைந்த முழங்கால் குருத்தெலும்பில் எடையிறக்கம் செய்வதால், எலும்பு வெட்டு அறுவை சிகிச்சை வலியைக் குறைக்கலாம் ; செயல்பாட்டு திறனை மேம்படுத்தலாம் ; முழங்கால் தேய்மானமாவதை மிதப்படுத்தலாம் ; மற்றும் முழு அல்லது பகுதி முழங்கால்மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் தேவையை தாமதப்படுத்தலாம்.

முழங்கால் கீழ்வாதத்திற்கான எலும்பு வெட்டு (osteotomy) சிகிச்சைக்கு பிறகு அவர்களுக்கு என்ன நடக்கின்றது?
அனைத்து ஆய்வுகளிலும் பின்தொடர் காலம் மிக சிறியதாக இருந்ததால் சிகிச்சை தோல்வி பற்றி மதிப்பிட முடியவில்லை; இது முழங்கால்மூட்டு மாற்று சிகிச்சைக்கு மறுஆய்வை ஆலோசிக்க வைக்கிறது.

அனைத்து ஆராய்ச்சிகளிலும் பங்குபெற்றோர் எந்த ஒரு வகையான உயர்மட்ட கணுக்காலுள்ளெலும்பு எலும்பு வெட்டு (Osteotomy) அறுவைச் சிகிச்சையிலும் குறைவான வலி, முழங்கால் மூட்டு செயல்பாட்டு திறனில் நல்ல மேம்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தில் மேம்பாடு இருந்ததாக தெரிவித்தனர். இருப்பினும் இந்த ஒப்பீடு அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சையுடன் எலும்பு வெட்டு (Osteotomy) அறுவைச் சிகிச்சையை ஒப்பிட்டு பெறப்பட்டது அல்ல. மாறாக இவை எலும்பு வெட்டு (Osteotomy) அறுவைச் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில் பெறப்பட்டது. வெவ்வேறு எலும்பு வெட்டு (Osteotomy) அறுவைச் சிகிச்சை உத்திகளுக்கு இடையே வலி மற்றும் செயல்பாட்டு திறனில் வேறுபாடு இல்லை.

இரத்த உறைக்கட்டி (thromboembolism), நரம்பு மற்றும் இரத்தநாள சம்பந்தமாக அமைப்புகளில் சிதைவு (lesions) போன்றவை அரிதான சிக்கல்கள்.

உசி பாதையில் தொற்று மற்றும் வலிக்காக வன்பொருள் (hardware) அகற்றல் ஆகிவயவை மறு அறுவை சிகிச்சை (reoperation) செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம். ஆப்பு உத்தி பயன்படுத்த பட்டவர்களை, உயர்மட்ட கணுக்காலுள்ளெலும்பு எலும்பு வெட்டு (Osteotomy) அறுவைச் சிகிச்சை பெற்றவர்கள் மறு அறுவை சிகிச்சை வீதங்கள் அதிகமங்க இருக்கலாம்.

இரண்டு ஆய்வுகள் பகுதி முழங்கால் மாற்று எதிராக உயர்மட்ட கணுக்காலுள்ளெலும்பு எலும்பு வெட்டு (Osteotomy) அறுவைச் சிகிச்சையை ஒப்பிட்டது இந்த இரண்டு அறுவை சிகிச்சை வகைகளுக்கு இடையே பயன்களில் வேறுபாடு எதுவும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information