வெப்ப தீக் காயங்கள் கொண்ட நோயாளிகள் ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபியால் பயனடைவர் என்பதற்கு சிறிது ஆதாரமே உள்ளது 

தீக் காயங்கள் மிகவும் பொதுவானதாகும், சிலநேரங்களில் உயிரை கொல்லும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த நலனின் மீது ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும். பெரும்பாலும், மீட்சி மெதுவாக இருக்கும் மற்றும் கிருமித் தொற்று மற்றும் தழும்புகளால் மேலும் சிக்கலாகும். ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி (ஹச்ஓபிடி) என்பது தீக் காய பகுதியில் பிராண வாயுவின் வழங்கலை அதிகரித்து மற்றும் குணமாகுதலை மேம்படுத்துவதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஒரு சிகிச்சையாகும். ஹச்ஓபிடி, ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுகூடத்தில் (ஆழ் கடல் மூழ்காளர்கள் , கடலின் மேற்பரப்பிற்கு திரும்ப வரும் போது அவதிப்படும் அழுத்த பிரச்னைகளுக்கு பயன்படுத்துவதை போன்று) மக்கள் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்க செய்வதை உள்ளடக்கும். இந்த திறனாய்வு, வரம்பிற்குட்பட்டிருந்த எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே கொண்ட இரண்டே சீரற்ற சோதனைகளை கண்டது. ஹச்ஓபிடி-யால் எந்த நிலைப்பாடான நன்மையும் இருக்கவில்லை, ஆனால் ஒரு சோதனை, குணமாகும் நேரத்தில் மேம்பாடு இருந்தது என்று பரிந்துரைத்தது. ஒட்டுமொத்தமாக, தீக் காயங்கள் நோயாளிகளில், ஹச்ஓபிடி-யின் பயன்பாட்டை ஆதரிக்க அல்லது மறுக்க சிறிதளவு ஆதாரமே இருந்தது. அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information