இந்த காக்ரேன் திறனாய்வு சுருக்கத்தில், முழங்கால் மூட்டு கீல்வாதத்திற்கு அகநோக்கி வழி (ஆர்த்ரோஸ்கோபிக்) அறுவை சிகிச்சை வாயிலாக அன்னிய பொருளை நீக்கல் (debridement) செய்வதன் விளைவுகளை குறித்து ஆராய்ச்சிமூலம் நாங்கள் அறிந்தவற்றைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
இந்த மதிப்பாய்வுரை முழங்கால் கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான, அகநோக்கி வழி (ஆர்த்ரோஸ்கோபிக்) மூட்டு அறுவை சிகிச்சை பற்றி கூறுவது:
- அகநோக்கி வழி (ஆர்த்ரோஸ்கோபிக்) மூட்டு அறுவை சிகிச்சை எடுத்துகொண்டவர்களை போலிஅறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களோடு ஒப்பிட்டபோது வலி மற்றும் செயல்பாட்டு திறன் பெரும்பாலும் குறையவில்லை. மூட்டு சுத்தம் செய்யும் சிகிச்சை (lavage)யோடு ஒப்பிடும்போது அநேகமாக வலி மற்றும் செயல்பாட்டு திறனில் சிறியஅளவு வேறுபாடே ஏற்பட்டது அல்லது எந்த வித்தியாசத்தையும் ஏற்படவில்லை.ஒருவேளை சுத்தம் செய்யும் சிகிச்சையை விட வலியில் முன்னேற்றம் தரலாம். மூடிய ஊசியால் மூட்டு சுத்தம் செய்தல் முறையுடன் ஒப்பிடும்போது வலியில்அல்லது செயல்பாட்டு திறனில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம்
பெரும்பாலும் பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய துல்லியமான விவரங்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை. இது மிக குறிப்பாக,அரிதான ஆனால் கடுமையான பக்க விளைவுகளை பொருத்த வரை உண்மையாகும். சிறிய அளவில் நோய்தொற்று அபாயம் மற்றும் சிரை பகுதியில் இரத்த உறைக்கட்டி, போன்றவை சாத்தியமான பக்கவிளைவுகளாக இருக்கலாம்.
கீல்வாதம் என்றால் என்ன மற்றும் அகநோக்கி வழி (ஆர்த்ரோஸ்கோபிக்) அன்னிய பொருளை நீக்கல் (debridement) சிகிச்சை என்றால் என்ன?
எலும்பு மூட்டுகளில் கீல்வாதம் என்பது கீல்வாதங்களில் அதிக அளவில் பொதுவாக ஏற்படக் கூடிய ஒன்றாகும். அது கை, இடுப்பு, தோள்பட்டை மற்றும் கால் மூட்டுகளைப் பாதிக்கலாம். இந்த மூட்டுவாதம், எலும்புகளில்ன் முனைகளைப் பாதுகாக்கும் குருத்தெலும்புகளை உடையச் செய்து வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் கீல்வாதம் கால் மூட்டுகளில் வெவ்வேறு இடங்களில் அல்லது முழுவதுமாகவும் ஏற்படலாம். கீல்வாதம் கால் மூட்டுகளில் வெவ்வேறு இடங்களில் அல்லது முழுவதுமாகவும் ஏற்படலாம். குருத்தெலும்பு உடையும்போது, சிறிய திசுத் துண்டுகள் மூட்டை சுற்றி இருந்துகொண்டு வீக்கத்துடன் இணைந்து மூட்டு சரியாக செயல்படுவதிலிருந்து தடுக்கும்.
அகநோக்கி வழி ஆர்த்ரோஸ்கோபிக் மூலம் அன்னிய பொருளை (debridement)நீக்கலில் ,சேதமடைந்த திசு அல்லது எலும்பினை நீக்க கருவிகளை பயன்படுத்துவர். மருத்துவர் இந்த செயல்முறையை தொடங்கியவுடன் ஒரு கருவியை பயன்படுத்தி கழுவுவதற்கான திரவத்தைப் பீய்ச்சி அடித்து எலும்பு மூட்டினை சுற்றியுள்ள அனைத்து சிதைந்த திசுக்களையும் வெளியில் இழுத்து விடுவார். இந்த செயல்முறை கழுவல் அல்லது வெளியேற்றுதல் எனப்படும். அதன் பின், எலும்பு மூட்டில் உள்ள தளர்ந்த அல்லது உடைந்த எலும்புகள் நீக்கப்படும்.
கீழ்வாதம் உள்ளவர்களில், கழுவுதல் முறையை பயன்படுத்துபவர்களுடன் அகநோக்கி வழி (ஆர்த்ரோஸ்கோபிக்) அன்னிய பொருளை நீக்கல் (debridement) செய்பவர்ளை ஒப்பிடும்போது என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த கணிப்பு:
வலி:100 இல் 66 க்கும் மேற்பட்டவர்கள் ஓராண்டுக்குப் பிறகும் , 100 இல் 48 க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் வலி இல்லாமல் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த முடிவுகள் குறைந்த தர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
கீழ்வாதம் உள்ளவர்களில் அகநோக்கிவழி (ஆர்த்ரோஸ்கோபிக்) அன்னிய பொருளை நீக்கல் (debridement) சிகிச்சை பெறுபவர்களை மருந்துப்போலியை பெறுபவர்களுடன் ஒப்பிடும்போது ஏற்படும் விளைவுகளின் சிறந்த கணக்கீடு:
இரண்டு வார சிகிச்சைக்குப் பின் வலி: நோயாளிகளின் வலி 0-100 புள்ளிகள் கொண்ட அளவுகோலில் 9 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது.
இரண்டு வார சிகிச்சைக்குப் பின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறன்: நோயாளிகளின் வலி 0-100 புள்ளிகள் கொண்ட அளவுகோலில் 8 புள்ளிகள் அளவிற்கு மருந்தற்ற குளிகை குழுவை விட அதிகரித்தது. இந்த முடிவுகள் மிதமான-தரம் கொண்ட ஆதரத்தின் அடிப்படையாகக் கொண்டவையாகும்.
12 மாத சிகிச்சைக்குப் பின் உடற்சார்ந்த செயல்பாட்டு திறன்: செயல்பாட்டு திறன் மருந்துப்போலிகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு 0-100 கொண்ட அளவுகோளில் 7 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது, இது அகநோக்கிவழி திசுநீக்க சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் மிக மிக சராசரி அளவிலேயான முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை காட்டுகிறது. இந்த முடிவுகள் குறைந்த தர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
தரப்பட்டுள்ள எண்ணிக்கை எங்களின் சிறந்த மதிப்பீடு. எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் ஒரு வேறுபாடுடைய அளவீட்டை கூறியுள்ளோம் ஏனென்றால் நோய் சிகிச்சையின் உண்மையான விளைவுகள் அந்த குறிப்பிட்ட அளவீட்டு எல்லைக்குள் இருக்க 95 சதவிகிதம் வாய்ப்புள்ளது.
மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு