மார்பக புற்று நோய் சிகிச்சை காரணமாக ஏற்படும் மேற்-புய செயல்-பிறழ்ச்சிக்கான உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகள்

மார்பக புற்று நோய் காரணமாக ஏற்படும் கரம் மற்றும் தோள்பட்டை அசைவு பிரச்னைகள் மீது உடற்பயிற்சியின் விளைவு பற்றி எங்களுக்கு தெரிந்ததை இந்த காக்குரேன் திறனாய்வு சுருக்கவுரை அளிக்கிறது.

மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சையை தொடர்ந்த மேற்-புய செயல்-பிறழ்ச்சி:

மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சைக்கு பின் பயன்படுத்தப்படும் மேற்-கர மூட்டு அசைவுகள், தசை நீட்டித்தல் மற்றும் வலிமை பயிற்சிகள், தோள்பட்டை அசைவின் மீட்சியை முன்னேற்றியது என்று காட்டப்பட்டுள்ளது. எனினும், எந்த வகையான உடற்பயிற்சிகள் சிறந்ததாக இருக்கும் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் எவ்வளவு சீக்கிரம் உடற்பயிற்சிகளை தொடங்கலாம் என்பது பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. மேலும், அறுவை சிகிச்சைக்கு பின் நிலைத்திருக்கும் மேற்-புய பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு வருவதில் உடற்பயிற்சி உதவியாக இருக்குமா என்று தெரியவில்லை மற்றும் மேற்-புய உடற்பயிற்சிகள், கரத்தில் நிணநீர் தேக்க வீக்கம் உருவாவதின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும் என்று ஒரு கருத்து உள்ளது. இந்த திறனாய்வில், மொத்தம் 24 ஆய்வுகள், மேற்-புய செயல்-பிறழ்ச்சியின் மேல் உடற்பயிற்சியின் நன்மையை ஆராய்ந்தன. அறுவை சிகிச்சைக்கு பின் விரைவில் உடற்பயிற்சியை தொடங்குவது அல்லது ஒரு வாரம் அளவில் உடற்பயிற்சியை தாமதிப்பது சிறந்ததாக இருக்குமா என்பதை பத்து ஆய்வுகள் ஆராய்ந்தன. ஆறு ஆய்வுகள், அறுவை சிகிச்சையை தொடர்ந்து, கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டங்களை வழக்கமான பராமரிப்போடு (உடற்பயிற்சி சிற்றேடு அல்லது உடற்பயிற்சியின்மை) ஒப்பிட்டதை ஆராய்ந்தன. புற்று நோய் சிகிச்சையின் போது அளிக்கப்பட்ட உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகளை மூன்று ஆய்வுகள் ஆராய்ந்தன, மற்றும் புற்று நோய் சிகிச்சைக்கு பின்னர் அளிக்கப்பட்ட உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகளை ஐந்து ஆய்வுகள் ஆராய்ந்தன.

மார்பக புற்று நோய் கொண்ட பெண்களில், மேற்-புய உடற்பயிற்சியின் விளைவு பற்றிய ஒரு சிறந்த மதிப்பீடு:

1) இந்த திறனாய்வு, மேற்-புய உடற்பயிற்சி (எடுத்துக்காட்டு. தோள்பட்டை மூட்டசைவு மற்றும் தசை நீட்டித்தல்) மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சையை தொடர்ந்து, மேற்-புய அசைவின் மீட்சிக்கு உதவியாக இருந்தது என்று கண்டது. அறுவை சிகிச்சைக்கு பின் விரைவாக உடற்பயிற்சியை தொடங்குதல் ( நாள் 1 முதல் நாள் 3 வரை) குறுகிய கால கட்டத்திற்கு, தோள்பட்டை அசைவின் முன்னேற்றத்தை விளைவிக்கும்; எனினும், உடற்பயிற்சியை ஒரு வார கால அளவில் தாமதமாக தொடங்குவதைக் காட்டிலும், இது அதிகப்படியான புண் வடிதலையும் மற்றும் புண் வடிகால்கள் அதிக காலம் இருக்க வேண்டியதையும் விளைவிக்கும்.

2) அறுவை சிகிச்சையை தொடர்ந்த ஆரம்ப வாரங்களில் அளிக்கப்பட்ட இயன் முறை சிகிச்சை போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டங்கள், தோள்பட்டை அசைவை மீண்டும் பெறுவதற்கும் மற்றும் தலைக்கு மேல் தூக்குதல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் தோள்பட்டை மற்றும் கரத்தின் பயனுக்கும் நன்மை அளித்தன என்று இந்த திறனாய்வு காட்டியது.

3) அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அல்லது அறுவை சிகிச்சையின் போது அல்லது பிற புற்று நோய் சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்கப்பட்ட மேற்-புய உடற்பயிற்சி, அதிக நோயாளிகளின் கரத்தில் நிண நீர் தேக்க வீக்கத்தை ஏற்படுத்தியதா என்பதற்கு எந்த ஆதாரத்தையும் இந்த திறனாய்வு காணவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information