முதுகு வலி என்பது மீண்டும் மீண்டும் ஏற்படும் இயல்பையுடைய ஒரு பொதுவான குறைபாடாகும். நாங்கள் இந்த ஆய்வுரையை, அதாவது உடற்பயிற்சிகள், சிகிச்சையின் ஒரு பகுதியாகவோ அல்லது சிகிச்சைக்கு பிந்தைய திட்டமாகவோ மீண்டும் மீண்டும் ஏற்படும் கீழ்-முதுகுவலியை குறைக்குமா என்பதை கண்டறிய நடத்தினோம். முதுகு வலி அனுபவமுடைய நபர்களையும், உடற்பயிற்சிகள் மட்டுமே கொண்ட தலையீடுகளை உள்ளடக்கிய ஆய்வுகளையும், மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படுகிற கீழ்-முதுகுவலியை அளவிட்ட ஆய்வுகளையும் நாங்கள் தேடினோம்.
அவ்விடத்தில், 1520 பங்கேற்பாளர்களை கொண்ட ஒன்பது ஆய்வுகள் இருந்தன. அவற்றில், சிகிச்சைக்கு பிற்பாடு செய்யப்படும் உடற்பயிற்சிகள் , மீண்டும் மீண்டும் ஏற்படும் முதுகுவலியின் விகிதத்தையும் எண்ணிக்கையையும் குறைக்க கூடும் என்பதற்கு மிதமான தரமுடைய சான்றுகள் இருந்தன. ஆனபோதிலும், உடற்பயிற்சி சிகிச்சை ஆய்வுகளின் முடிவுகள் முரண்பட்டிருந்தன.
உடற்பயிற்சி செய்வதினால் ஏற்படும் பாதகமான (பக்க) விளைவுகளை பற்றி எந்த ஆய்விலும் குறிப்பிடப்படவில்லை. இந்த ஆய்வுரைக்கான வரம்பானது, ஆய்வுகளுக்கிடையே உடற்பயிற்சியில் உள்ள வேறுபாடுகளுக்குட்பட்டிருப்பதால் மீண்டும் மீண்டும் ஏற்படும் கீழ்-முதுகுவலி நிகழ்வுகளை தடுக்கும் அவ்வகைப்பட்ட திட்டத்தின் உள்ளடக்கத்தை குறுப்பிடுவது கடினமாக உள்ளது.
மொழிபெயர்ப்பு: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி. இந்த மொழிபெயர்ப்பு குறித்த கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: cynthiaswarnalatha@gmail.com (அல்லது) atramalingam@gmail.com.