தோள்பட்டை முதுமை மூட்டழற்சி அறுவை சிகிச்சையின் திறன்கள் குறித்து ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்ரேன் திறனாய்வு சுருக்கம் மூலம் வழங்குகிறோம்.
தோள்பட்டை முதுமை மூட்டழற்சி பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு மூட்டுச் சீரமைப்பு சிகிச்சையால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று இந்த ஆய்வு காண்பிப்பதாவது:
- பகுதி- மூட்டுச் சீரமைப்புடன் ஒப்பிடும்போது வலியை குறைக்கலாம்.
-பகுதி- மூட்டுச் சீரமைப்புடன் ஒப்பிடும்போது தோள்பட்டை சார்ந்த உடற்சார்ந்த செயல்பாட்டு திறன் மேம்படலாம்.
- பகுதி- மூட்டுச் சீரமைப்புடன் ஒப்பிடும்போது, அறுவை சிகிச்சையின் போது எலும்பு முறிவு மற்றும் தொற்று போன்ற பக்க விளைவுகள் குறைவாக வர வாய்ப்பு உள்ளது.
பெரும்பாலும் பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய துல்லியமான விவரங்கள் எங்களுக்கு கிட்டவிலை. இது மிக குறிப்பாக,அரிதான ஆனால் கடுமையான பக்க விளைவுகளை பொருத்த வரை உண்மையாகும்.
முதுமை மூட்டழற்சி என்றால் என்ன மற்றும் பகுதி- மூட்டுச் சீரமைப்பு அறுவை சிகிச்சை என்றால் என்ன?
முதுமை மூட்டழற்சி என்பது உங்கள் முழங்கால் போன்ற மூட்டுகளைத் தாக்கும் நோயாகும். உங்கள் மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து இந்நிலையை சரி செய்வதற்குப் பதிலாக, மோசமடையச் செய்கிறது. தோள்பட்டை மூட்டு முதுமை மூட்டழற்சி வலி, விறைப்புத்தன்மை மற்றும் தசை பலவீனத்தை உண்டாக்கும் இது தோள்பட்டை மூட்டு அசைவு மற்றும் ஒருவரின் தினசரி வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலைகளை பாதிக்கும்.
தோள்பட்டை முதுமை மூட்டழற்சிக்கு பலவித அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த திறனாய்வு இரண்டு அறுவை சிகிச்சை முறைகளை பற்றி மட்டுமே கண்டறிந்தது.2
தோள்பட்டை கீல்வாதத்திற்குக் பகுதி- மூட்டுச் சீரமைப்பு ஒரு அறுவை சிகிச்சை முறை , இதில் புயவெலும்புத்தலையின் (humeral head) ஒரு பகுதி செயற்கை முட்டு கொண்டு மாற்றப்படுகின்றது. மூட்டுச் சீரமைப்பு (arthoplasty) ஒரு அறுவை சிகிச்சை முறை , இதில் மூட்டின் ஒரு பகுதி செயற்கை மூட்டு கொண்டு மாற்றப்படுகின்றது. உங்களின் தோள்பட்டை மூட்டின் நிலையை பொறுத்தே எந்த வகையான அறுவை சிகிச்சை முறை என்று பொதுவாக முடிவெடுக்கப் படுகிறது.
அறுவை சிகிச்சைகைப் பின் இரண்டு வருடங்கள் கழித்து கீழ்வாதம் உள்ளவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான சிறந்த கணிப்பு:
வலி:
- மூட்டுச் சீரமைப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 0 முதல் 100 வரை என்ற அளவுகோலில், தங்கள் வலியை 6 என்று மதிப்பீடு செய்தனர்.
- பகுதி மூட்டுச் சீரமைப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 0 முதல் 100 வரை என்ற அளவுகோலில், தங்கள் வலியை 14 என்று மதிப்பீடு செய்தனர்.
- மூட்டுச் சீரமைப்பு சிகிச்சை செய்து கொண்டவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர்களின் வலி 8 புள்ளிகள் குறைந்தது என்று அளவிட்டனர். (முழுமையான வேறுபாடு 8%). இது வாய்ப்பின் விளைவாக இருக்கலாம்.
உடல் செயல்பாடு:
- பகுதி மூட்டுச் சீரமைப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 0 முதல் 100 வரை என்ற அளவுகோலில், தங்கள் திறனை 65 என்று மதிப்பீடு செய்தனர்.
-தோள்பட்டை மூட்டுச் சீரமைப்பு சிகிச்சை செய்து கொண்டவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவர்களின் தோள்ப்பட்டையை அசைக்கும் திறனை 77 புள்ளிகள் என்று அளவிட்டனர்.
-மூட்டுச் சீரமைப்பு சிகிச்சை செய்து கொண்டவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர்களின்தோள்பட்டையை அசைக்கும் திறன் 12 புள்ளிகள் மேம்பட்டது என்று அளவிட்டனர். (முழுமையான வேறுபாடு 10%).
பக்க விளைவுகள் :
-பகுதி- மூட்டுச் சீரமைப்பு சிகிச்சை பெற்ற 100-றில் 24 பேருக்கு தொற்று போன்ற பக்க விளைவுகள் வந்தது.
-முழு- மூட்டுச் சீரமைப்பு சிகிச்சை பெற்ற 100- றில் 20 பேறுக்கு தொற்று போன்ற பக்க விளைவுகள் வந்தது.
பகுதி- மூட்டுச் சீரமைப்பு செய்த 100 பேரில் 4 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. (முழுமையான வேறுபாடு 4%). இந்த முடிவு வாய்ப்பின் விளைவாக இருக்கலாம்.
மொழிபெயர்ப்பு: சி. இ. பி.என்.அர். குழு