வயது வந்தவர்களில் ஒரு உடைந்த முழங்கைக்கு பின், தாமதிக்கப்பட்ட முழங்கை இயக்கத்தோடு ஒப்பிடப்பட்ட முன்கூட்டிய இயக்கம்.

எட்டி அடைதல் அல்லது தூக்குதல் போன்ற எந்த ஒரு மேற்கர இயக்கத்திலும் முழங்கை ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. எலும்பு முறிவு என்று பொதுவாக குறிக்கப்படும் ஒரு உடைந்த எலும்பு , முழங்கையில் ஒரு நீட்டப்பட்ட கரத்தோடு சாதரணமாக விழுவதினால் ஏற்படக் கூடும். முழங்கை மூட்டை உருவாக்கும் மூன்று எலும்புகளின் ஒன்று அல்லது அதற்கும் மேலான பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்படக் கூடும். இந்த பகுதிகள், இரண்டு முன்னங்கை எலும்புகளின் (ரேடியஸ் மற்றும் அல்னா) மேல் பகுதிகள் மற்றும் மேற்கர எலும்பின் (ஹுமரஸ்) கீழ் பகுதியாகும் . ஒரு முழங்கை காயத்திற்கு பின் வரும் முழங்கை இறுக்கத்தன்மை மற்றும் இயல்பான இயக்க இழப்பு என்பது ஒரு சிறப்பாக- பதிவு செய்யப்பட்ட பிரச்னையாகும். மிக கடுமையான எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சையை உள்ளடக்கிய தொடக்க சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சையானது, ஆதரவிற்கு மட்டும் ஒரு ஆதாரப் பட்டியை பயன்படுத்தி உடனடியான மென்மையான முழங்கை இயக்கத்தைக் உள்ளடக்கக் கூடும், அல்லது ஒரு ஆதாரப் பட்டி அல்லது மாவுக் கட்டில் ஓய்வு எடுக்கும் ஒரு காலக் கட்டத்தை உள்ளடக்கக் கூடும். எலும்பு முறிவு குணமடைந்த பின்னர், எந்த அணுகுமுறை சிறந்த முழங்கை இயக்கத்திற்கும் மற்றும் செயல்பாட்டிற்கும் வழி வகுக்கும் என்பது தெரியவில்லை.

முழங்கை முறிவிற்கு பின், தாமதிக்கப்பட்ட முழங்கை இயக்கத்தோடு முன்கூட்டிய இயக்கத்தை ஒப்பிட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளுக்கு நாங்கள் தேடினோம். ரேடியசின் தலைப் பகுதியை உள்ளடக்கிய முழங்கை முறிவைக் கொண்ட 81 மக்களில், இரண்டு முதல் 47 மாதங்கள் வரை முடிவுகளை அறிக்கையிட்ட ஒரு சோதனையை நாங்கள் உள்ளடக்கினோம். இந்த சோதனையிலிருந்த ஆதாரம் மிக குறைந்த தரத்தைக் கொண்டிருந்தது. வலி அல்லது அவர்களின் முழங்கை அசைவில் வரம்புகளைக் கொண்டிருந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களில் முன்கூட்டிய மற்றும் தாமதிக்கப்பட்ட இயக்கத்தினிடையே எந்த முக்கியமான வித்தியாசங்களையும் இந்த சோதனை காணவில்லை. அனைத்து பங்கேற்பாளர்களும் அவர்களின் கரங்களை அவர்களுடைய முழு அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடிந்தது மற்றும் எவரும் அவர்களின் பணியை அல்லது வாழ்க்கைமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்று அறிக்கையிடப்பட்டது. எலும்பு முறிவு சிக்கல்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

முழங்கை முறிவு கொண்ட வயது வந்தவர்களில், முன்கூட்டிய இயக்கம் சிக்கல்களை அதிகரிக்காமல் செயல்பாட்டை மேம்படுத்தியதா என்ற கேள்விக்கு பதிலளிக்க நம்பத்தகுந்த ஆதாரத்திற்கு ஒரு பற்றாக்குறை உள்ளது என்று நாங்கள் முடிவு செய்தோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information