கழுத்து அளவில் எற்படும் முதுகுதண்டு பாதிப்புகள் சுவாசதசைகளை தளர்ந்து அல்லது செயலிழக்க செய்கின்றன. இதுநுரையீரலின் காற்று கொள்ளவை குறைப்பதோடு, பெருமூச்சு எடுத்தல், இருமுதல் போன்ற செயல்திறன்களை குறைத்துவிடுகிறது. இவர்களுக்கு நுரையீரல் தொற்றுகள் ஏற்படவாய்ப்புகள் அதிகமாகிறது. உடலில் உள்ள மற்ற தசைகளை வலுபடுத்துவது போல வேசுவாச தசைகளையும் வலுபடுத்த வழிகள் உண்டு; இருப்பினும் கழுத்து அளவில் முதுகுதண்டு பாதிக்கப்படவர்களுக்கு இது எவ்வளவு பயன் தரும் என்பது உறுதியாக தெரியவில்லை. இந்ததிறனாய்வு, சுவாச தசை பயிர்ச்சிகளை மற்ற சாதாரண வைத்திய முறைகளோடு ஒப்பிட்டது. இந்ததிறனாய்வு, சுவாசதசை பயிர்ச்சிகளை மற்ற சாதாரண வைத்திய முறைகளோடு ஒப்பிட்ட 11 ஆய்வுகளை (212 கழுத்து அளவில் முதுகுதண்டு பாதிக்கப்பட்டவர்கள்) நாங்கள் திறனாய்வு செய்ததில் சுவாசதசை பயிற்சிகள் இவர்களுக்கு காற்று கொள்ளளவை கொஞ்சமாக கூட்டுவதோடு, காற்றை உள்வாங்கவும், வெளிகொண்டுவரவும், இருமவும் உதவுவது அறியப்பட்டது. மூச்சுதினறலின் போதும், ஒரே மூச்சில் அதிககாற்று வெளியேற்றும் பயிற்சிக்கு எந்த பயனும் அளிக்கவில்லை. சுவாசத்திற்குரிய தசை பயிற்சிகள் நுரையீரல் தொற்றுகள் வராமல் தடுக்கவோ அல்லது இவர்களின் வாழ்கை தரத்தை உயர்த்தவோ உதவுமா என்ற கேள்விக்கு போதிய ஆய்வுகள் எங்களுக்கு கிட்டாத காரணத்தினால், அதனை அறியமுடியவில்லை . கழுத்து அளவில் முதுகுதண்டு பாதிக்கப்படவர்கள் சுவாச பயிற்சிகள் செய்வதால் எந்த ஒரு பாதகமான விளைவும் எங்களால் கண்டறியப்படவில்லை.
மொழிபெயர்ப்பு: இரா. ரவி மற்றும் சி.இ.பி.என். அர் குழு