மணிக்கட்டு குகை நோய் தொகுப்புக்கு (carpal tunnel syndrome) பணிச்சூழலியல் இருப்பு நிலை அல்லது உபகரணங்கள்

மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு (Carpal tunnel syndrome) என்பது கையிலுள்ள இரண்டு பிரதான நரம்புகளில் ஒன்றான மீடியன் நரம்பு (median nerve)மணிக்கட்டில் அமுக்கப்படுவதால், கை,மணிக்கட்டுஆகியவற்றிலும், சிலநேரங்களில் முன்கையிலும் வலி ஏற்படுதலுடன், குறிப்பாக கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகியவற்றில் கூச்ச உணர்வு, உணர்வின்மை போன்றவை ஏற்படும் நிலைமையாகும். கடுமையாக பாதிக்கப்பட்ட இனங்களில் நோயாளிகளின் கட்டைவிரல் தசைகளிலும் பலவீனம் ஏற்படலாம். இது மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதத்தினரையும், பொதுவாக அதிக அளவில் பெண்களையும் பாதிக்கிறது.

சி.டி.எஸ் க்கான அறுவை சிகிச்சையில், மீடியன் நரம்புசெல்கின்ற மணிக்கட்டு குகை திறந்து விரிக்கப்படும். உடற்பயிற்சிகள், சிம்பு (splitting) அணிவது மற்றும் பணிச்சூழலியல் தலையீடுகள் போன்றவை அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை முறைகளில் அடங்கும். விசைப்பலகையில் சிறிய மாற்றங்கள் போன்ற பணிச்சூழலியல் தலையீடுகள், மணிக்கட்டு நேராக இருக்கும் நிலையில் கையினைப் பயன்படுத்த வலுவளிக்கின்றன (மடக்கியோ,நீட்டியோ அல்லது அல்லது பக்கவாட்டில் விலகியோ இல்லாமல்). இந்த நேரான அல்லது neutral/ நடுநிலையில் மணிக்கட்டு இருக்கும் போது மீடியன்நரம்பு செல்லும் மணிக்கட்டு குகை அதனுடைய உச்ச திறன் நிலையில் இருக்கும். கோட்பாட்டளவில், இந்த நிலையில் மணிக்கட்டை வைப்பது மீடியன் நரம்புக்கு குறைந்த அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திறனாய்வு, சி.டி.எஸ்நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பணிச்சூழலியல்சிகிச்சைகள் எந்த அளவு திறனுடையவை என்பதைக் கண்டறிவதை நோக்கமாக கொண்டது. இரண்டு ஆய்வுகள் (105 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட) மட்டுமே கண்டறிப் பட்டது. இவை ஆராய்ச்சி சார்புத்தன்மையை குறைவாக்க வடிவமைக்கப் பட்டபோதிலும், எதுவுமே உயர் தரத்தில் இருக்கவில்லை. எந்த ஆய்வும் குறுகிய கால ஒட்டுமொத்த முன்னேற்றம், பாதகமான விளைவுகள்அல்லது அறுவை சிகிச்சையின் தேவை, போன்ற விளைவுகளைப் பெறும் விதத்திலான மதிப்பீடு செய்யவில்லை 12 வாரங்களுக்குப் பிறகு பணிச்சூழலியல் விசைப்பலகை உபோகிப்பது வலியை குறைக்கும் என்று ஒரு சிறிய ஆய்வு (25 பங்கேற்பாளர்கள்) கண்டறிந்தது; ஆனால் இரண்டாவது ஆய்வு, ஆறு மாத இறுதியில் விசைப்பலகை குழுக்கள் இடையே வலி தீவிரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை எனக் கூறியது. பணிச்சூழலியல் கணினியின் எழுத்துப்பலகை உபோகிப்போரின் கை செயல்பாட்டு திறன் அல்லது சி.ட்டி .எஸ் -ன் அறிகுறிகள் அதனை பயன்படுத்தாதவர்களைவிட மேம்பட்டது என்று எந்த ஆய்வும் கண்டறியவில்லை. தர அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப் பட்டஅனைத்துஆதாரங்களையும் சேர்த்து பார்க்கும் போது CTS சிகிச்சைக்கு, பணிச்சூழலியல்கணினியின் எழுத்துப்பலகையின் பயன்பாட்டிற்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்த வலுவான சான்றுகளும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழியாக்கம்: சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information