திறனாய்வு கேள்வி
தசைகள் (இக்கட்டான தசை அழிவு நோய், சிஐஎம்) மற்றும் நரம்புகளில் (இக்கட்டான நரம்பு இயக்கக் கோளாறு, சிஐபி) உருவாகிற பலவீனம் கொண்ட மக்களுடைய மீட்சியில் உடற் புனர்வாழ்வு உதவி செய்கிறதா?
பின்புலம்
சிஐஎம் மற்றும் சிஐபி ஆகியவை தீவிர சிகிச்சையின் பொதுவான சிக்கல்களாக உள்ளன. சிஐஎம் மற்றும் சிஐபி இரண்டும், அங்க பலவீனம் மற்றும் சுவாசத்திற்கு பயன்படுத்தப்படும் தசைகளின் பலவீனத்தை ஏற்படுத்தும். சிஐஎம் மற்றும் சிஐபி, மக்களை அதிகமாக உடல் நல குன்றியும், இறப்பை அதிகரிக்கவும் மற்றும் மீட்பை தாமதிக்கவும் செய்கின்றன. நீண்ட-கால இயக்க சிரமங்களுக்கு, சிஐஎம் மற்றும் சிஐபி முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த சிரமங்கள், 'தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை' பாதிக்கக் கூடும், (குளித்தல், உடுத்துதல், உணவருந்துதல், ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் குடும்ப வாழ்வில் பங்கு போன்ற அன்றாட பணிகள்). மீட்சி, வாரங்கள் அல்லது மாதக் கணக்கில் எடுக்கிறது. சிஐஎம்/சிஐபி கடுமையாகும் போது, மீட்சி சிறியதாக அல்லது இல்லாமல் இருக்கலாம்.
சிஐஎம் மற்றும் சிஐபி கொண்ட மக்களில் உடற் புனர்வாழ்வு, மீட்சிக்கு, மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மேம்படுத்த மற்றும் சிக்கல்களை தடுக்க உதவலாம். உடற் புனர்வாழ்வு, தசை நீட்டல் பயிற்சிகள் மற்றும் வலிமை கட்டமைப்பு பயிற்சி, மற்றும் உடுத்துதல், இடமாற்றங்கள் (எ.கா. நாற்காலியில் இருந்து படுக்கைக்கு), அமர்ந்து எழுதல், நடைபயிற்சி மற்றும் சமநிலை இருத்தல் ஆகிய நடைமுறை பயிற்சிகளை உள்ளடக்கும்.
ஆய்வு பண்புகள்
சிஐஎம் மற்றும் சிஐபி-க்கான உடற் புனர்வாழ்வு சிகிச்சைகளின் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளுக்காக, மருத்துவ இலக்கியத்தில் ஒரு விரிவான தேடலை நாங்கள் மேற்கொண்டோம்.
முக்கிய முடிவுகள்
இந்த திறனாய்வில் சேர்ப்பதற்காக எங்களின் கடுமையான சேர்க்கை திட்ட அளவீடுகளை சந்தித்த எந்த உயர் தரமான சோதனைகளையும் நாங்கள் கண்டறியவில்லை.
சான்றின் தரம்
சிஐஎம் மற்றும் சிஐபி கொண்ட மக்களில், உடற் புனர்வாழ்வு அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை அதிகரிக்கிறது என்பதை சோதித்த எந்த சோதனைகளும் தற்போது இல்லை. சிஐஎம்/சிஐபி-ல், புனர்வாழ்வின் விளைவுகளை தீர்மானிக்க நன்கு-நடத்தப்பட கூடிய ஆராய்ச்சி வேண்டும்.
இந்த ஆதாரம், ஜூலை 2014 வரை தற்போதையது.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.