பின்புலம்
இதய புனர்வாழ்வு, குறிப்பாக உடற்பயிற்சியோடு கூடிய கல்வி மற்றும் உளவியல் ஆதரவு போன்ற பலவகை நடவடிக்கைகளின் கூட்டமைப்பின் மூலம் இதய நோய் கொண்ட மக்களின் செயல்பாடு, ஆரோக்கியம் தொடர்பான வாழ்க்கை தரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த முயற்சிக்கிறது. 2000-களின் நடுப்பகுதியில் இருந்து, வெளியிடப்பட்ட காக்ரேன் திறனாய்வுகளின் எண்ணிக்கை, இதய புனர்வாழ்வின் ஆறு திட்டமிட்ட திறனாய்வுகளாக /மெட்டா-ஆறு திட்டமிட்ட திறனாய்வுகளாக உயர்ந்துள்ளது. இந்த திறனாய்வுகள்,பல்வேறு விதமான இதய நோய் தாக்குதல்கள் (எ .கா. ஒரு மாரடைப்பு ,இதய அறுவை சிகிச்சை அல்லது இதய செயலிழப்பு போன்றவற்றை தொடர்ந்து) அல்லது இதய புனர்வாழ்வு வழங்கப்படுகிற பல்வேறு முறைகளைக்குறித்து (எ .கா. மருத்துவமனையில் அல்லது வீடு -அடிப்படையிலான அமைப்புகளில், உடற்பயிற்சி மட்டுமே கொண்ட திட்டங்களை அல்லது உடற்பயிற்சியோடு கல்வி அல்லது உளவியல் அல்லது இரண்டும் இணைந்த தலையீடுகளை) மீது இதய புனர்வாழ்வின் தாக்கத்தை மதிப்பீடு செய்தன. தற்போதைய இதய புனர்வாழ்வின் காக்ரேன் மதிப்புரைகளை மறுஆய்வு செய்து ,'இப்பிரிவைச் சார்ந்த' திறனாய்வுகளுக்கு ஒரு 'நட்பு முன்னுரையை 'வழங்குவதே இந்த மேலோட்டத்தின் குறிக்கோளாகும்.
ஆய்வு பண்புகள்
நாங்கள் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளிலிருந்த (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சை குழுக்களுள் ஒன்றில் பங்கேற்பாளர்களை தோராயமாக ஒதுக்கின சோதனைகள்) தரவுகளை ஆய்வு செய்த காக்குரேன் திறனாய்வுகளை தேடினோம். அச்சோதனைகள், இதய நோய் கொண்ட பெரியவர்களில் இதய புனர்வாழ்வின் செயல்திறனை பார்வையிட்டது மற்றும் ஒரு உடற்பயிற்சி அல்லாத கட்டுப்பாட்டு குழுவுடன் நோயாளி விளைவுகளை ஒப்பிட்டது. இந்தகண்ணோட்டமானது, இந்த திறனாய்வுகளில் இருந்து அறியப்பட்ட கண்டுபிடிப்புகளை தொகுத்துரைத்துள்ளது.
முக்கிய முடிவுகள்
நாங்கள் முதன்மையாக மாரடைப்பு அனுபவம் கொண்ட அறுவை சிகிச்சை மேற்கொண்ட அல்லது நாள்பட்ட இதய செயலிழப்பு கொண்ட 98,093 மக்களில் செய்யப்பட்டிருந்த 148 சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை உள்ளடக்கிய ஆறு உயர்தர காக்குரேன் திறனாய்வுகளை கண்டுபிடித்தோம். இந்த மேலோட்டத்தின் கண்டுபிடிப்புகள் , புனர்வாழ்வை மேற்கொள்ளாது இருப்பதை காட்டிலும், இதய புனர்வாழ்வில் பங்கேற்பதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற அபாயத்தின் குறைப்பு, அத்துடன் ஆரோக்கியம் தொடர்பான வாழ்க்கை தரம் போன்றவை உள்ளடங்கிய முக்கியமான நன்மைகள் இருப்பதை காண்பித்தது.
சான்றின் தரம்
சேர்க்கப்பட்டுள்ள முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளிலுள்ள சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளின் தரம் மாறுபட்டு இருந்தது, மற்றும் அவர்களின் ஆராய்ச்சி செயல் முறையியல் தரத்தில் உள்ள வரம்புகள் சான்றுகளின் தரம் மோசமடைய வழிவகுத்தது, இதன் நிமித்தம்ஆய்வு மற்றும் விளைவு பரந்து மாறுபட்டிருந்தது. இதய புனர்வாழ்வின் முறைப்படுத்தப்பட்ட திறனாய்வின் எதிர்கால நடத்தை மற்றும் அறிக்கைக்கான பின்வரும் பரிந்துரைகளை நாங்கள் செய்கிறோம்.
. பொருத்தமான இணை தலையீடுகளோடுக் கூடிய, தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சி திட்டங்களின் அடிப்படையில் இதய புனர்வாழ்வு அமைய வேண்டும் என்பதை பரிந்துரைக்கும் தற்போதைய நடை முறை வழிகாட்டல்களை பிரதிபலிக்கும் விதமாக இதய புனர்வாழ்வின் நோக்கம் இருக்க வேண்டும்.
• எதிர்கால இதய புனர்வாழ்வு திறனாய்வுகள், சோதனைகள் முழுவதிலும், தலையீடு பண்புகள் மற்றும் விளைவுகள் இடையேயான தொடர்பை ஆராயும் பொருத்தமான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, இதய புனர்வாழ்வின் பல்கூட்டுத்தன்மையை ஆராய வேண்டும்
.எதிர்கால காக்குரேன் இதய புனர்வாழ்வு திறனாய்வுகள், தாங்கள் கையாளும் முறைகள் மற்றும் அறிக்கையிடல் ஆகியவற்றை தரப்படுத்த வேண்டும்.
மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.