பக்கவாதத்திற்குப் பிறகான மீட்சியை மேம்படுத்துவதற்கான ஊக்கமூட்டும் நேர்காணல்

திறனாய்வு கேள்வி

பக்கவாதம் கொண்ட மக்களில், ஊக்கமூட்டும் நேர்காணலின் விளைவு பற்றிய ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம். ஒரு ஆய்வைக் நாங்கள் கண்டோம்.

பின்புலம்

மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உளவியல் பிரச்சினைகள், பக்கவாதத்திற்கு பிறகு பொதுவான பக்க விளைவுகளாக உள்ளன, அவை பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களின் அன்றாட வாழ்க்கை அல்லது புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கும் செயல் நோக்கம் இல்லாமையை ஏற்படுத்தும். ஊக்கமூட்டும் நேர்காணல் என்பது, ஒரு தரப்படுத்தப்பட்ட தொடர்பு திறமையால் அவர்களது உளப்போரட்டங்களை கண்டுபிடிப்பது மற்றும் தீர்ப்பது மூலம் அவர்களின் நடத்தையை மாற்ற மக்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு ஆலோசனை முறையாகும். அது அவர்களது பக்கவாதம் பின்னான மீட்சியின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை மேம்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வழியை வழங்குகிறது. பக்கவாதத்திற்கு பிறகு அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மேம்படுத்த ஊக்கமூட்டும் நேர்காணல் ஒரு பயனுள்ள சிகிச்சையாக இருந்ததா என்பதை நாங்கள் அறிய விரும்பினோம்.

ஆய்வு பண்புகள்

ஆதாரம் மார்ச் 2015 வரை தற்போதையது. ஒரே ஒரு ஆய்வு எங்கள் திட்ட அளவையை பூர்த்தி செய்தது: பக்கவாதத்திற்கு பிறகு , ஐந்து மற்றும் 28 நாட்கள் இடையே ஊக்கமூட்டும் நேர்காணல் அல்லது வழக்கமான பராமரிப்பை பெற்ற 18 வயது மற்றும் அதற்கு மேலான 411பக்கவாதம் கொண்ட நோயாளிகளை அது கொண்டிருந்தது. பின்தொடர் காலம் 12 மாதங்கள் ஆகும். ஊக்கமூட்டும் நேர்காணல் ஒவ்வொரு அமர்வும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை நீடித்து, நான்கு தனிப்பட்ட அமர்வுகளை வாரத்திற்கு ஒரு அமர்வாக கொண்டிருந்தது.

முக்கிய முடிவுகள்

நாங்கள் ஒரு ஆய்விலிருந்து கண்டுபிடித்த ஆதாரம் பக்கவாதத்திற்குப் பிறகு அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை மேம்படுத்த, ஊக்கமூட்டும் நேர்காணலின் பயன்பாட்டை ஆதரிக்க போதுமானதாக இல்லை, ஆனால் ஊக்கமூட்டும் நேர்காணல் பெற்ற பங்கேற்பாளர்கள் வழக்கமான பராமரிப்பை பெற்றவர்களை விட ஒரு சாதாரண மனநிலையை அதிகமாக பெற்றிருந்தனர்.

சான்றின் தரம்

சேர்க்கப்பட்டிருந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் சிகிச்சை ஒதுக்கீட்டிற்கு மறைக்கப்படுவது என்பது சாத்தியம் இல்லாததால், செயல்முறையியல் தரத்தில் சில ஒரு தலை சார்பு அபாயத்தைக் கொண்டிருந்தது என்று நாங்கள் மதிப்பிட்டோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information