இந்த வலையொலியின் ஆங்கில பதிப்பை தமிழில் மொழிபெயர்த்து, ஒலிப்பதிவு செய்து வழங்குவது யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்-லிருந்து சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்.
அநேக கர்ப்பிணி பெண்கள், காலை நேர குமட்டலை ஓரளவு அனுபவித்திருப்பர், ஆனால் சிலருக்கோ வாந்தியும் குமட்டலும் மிக அதிகமாக இருக்கும். இதற்கு உதவக் கூடிய சிகிச்சை தலையீடுகள் மீதான ஒரு காக்ரேன் திறனாய்வை அமெரிக்காவிலுள்ள பிலடெலிபியாவின் தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து ரூப்சா போலிக் என்பவர் மே 2016-ல் நடத்தினார். அதன் முக்கிய முடிவுகள் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.