க்ளோனிடைன் என்பது இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்தாகும், ஆனால் அது மருந்து மற்றும் மது அருந்துவதில் இருந்து விலகலின் அறிகுறிகளையும் குறைக்க உதவும். புகைபிடிப்பதை கை விடுவதற்கு சாத்தியப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய அதிகரிப்பிற்கு க்ளோனிடைன் வழி வகுக்கக் கூடும் என்று சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. எனினும், ஆதாரத்தை குறைந்த நம்பகத் தன்மையோடு ஆக்குவதற்கு சோதனைகளின் தரம் மோசமாக இருந்தன. காய்ந்த வாய் மற்றும் தூக்க மயக்கம் ஆகியவை க்ளோனிடைனின் பாதக விளைவுகளாகும். புகைபிடிப்பதை கை விடுவதற்கு முயற்சி செய்யும் மக்களுக்கு க்ளோனிடைன் ஒரு சிறந்த தேர்வாக இருக்க முடியாது, ஆனால், க்ளோனிடைன் மாற்று சிகிச்சை அல்லது மனச்சோர்வு நீக்கிகள் ஆகியவற்றால் உதவப்படாத மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.