நாட்பட்ட சோர்வு நோய்க்குறி (CFS) என்பது விளக்க முடியாத தொடர் சோர்வு அறிகுறிகளால் மக்களை அவதிக்குள்ளாக்கும் ஒரு பொதுவான நோய். இதில் பாதிக்கப்பட்டவர்கள் விளக்க முடியாத காரணத்தால் தொடர்ந்து சோர்வு அறிகுறிகள் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக பல மனநலம் மற்றும் நாள்பட்ட வலிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன் படுத்தப்படுத்தும் ஒரு உளவியல் சிகிச்சை மாதிரி அடிப்படையில் அளிக்கப்படும் மனோதத்துவ சிகிச்சை முறைதான் புலனுணர்வு நடத்தை மாற்றச் சிகிச்சை (Cognitive behaviour therapy). புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சை நாட்பட்ட சோர்வு நோய்க்குறிக்கு, தனித்தும் பிற சிகிச்சை முறைகளுடன் இணைந்தும் அளிக்கப்படும் போது ஆற்றலோடு செயல் படுகிறதா என்று கண்டறிவதோடு , மற்ற சிகிச்சை முறைகளை விட நடத்தை மாற்ற சிகிச்சை திறனானதா என்றும் அறிவதே ஆகும். இந்த திறனாய்வு மொத்தம் 1043 நாட்பட்ட சோர்வு நோய்க்குறி பங்கேற்பாளர்கள் கொண்ட 15 ஆய்வுகளை உட்படுத்தியுள்ளது. புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சை(CBT) எடுத்துக் கொண்டவர்களுக்கு சிகிச்சையின் முடிவில் பிற வழக்கமான சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் அல்லது சிகிச்சைக்காக காத்திருப்பவர்களைக் காட்டிலும் சோர்வு நோய்க்குறி குறைந்துள்ளதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என இந்த திறனாய்வு காண்பித்தது. புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சை குழுவில் இருந்த 40% நோயாளிகள் பிணி சார்ந்த முன்னேற்றம் காண்பித்தநிலையில் வழக்கமான கண்காணிப்பு சிகிச்சையில் 26% நோயாளிகள் மட்டுமே பிணி சார்ந்த முன்னேற்றம் காண்பித்தனர். 1-7 மாதங்கள் தொடர் கண்காணிப்பில், நடத்தை மாற்ற சிகிச்சை திட்டம் நிறைவு செய்தவர்களுக்கு சோர்வு நிலை தொடர்ந்து குறைந்திருந்தது, ஆனால் சிகிச்சையினை முழுமையாக முடிக்காமல் இடையில் கைவிட்ட நோயாளிகளுக்கும் வழக்கமான கண்காணிப்பு சிகிச்சை எடுத்து கொண்ட வர்களுக்கும் முன்னேற்றத்தில் வேறுபாடு எதுவுமில்லை மேலும் இந்த திறனாய்வு, புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சையினை. தளர்வு நுட்பங்கள், அறிவுரை மற்றும் ஆதரவு / கல்வி உட்பட்ட மற்ற வகையான உளவியல் சிகிச்சையுடனும் ஒப்பிபிட்டது இதில் புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சையில் பங்கேற்றவர்களுக்கு மற்ற உளவியல் சிகிச்சையில் கலந்து கொண்டவர்களைவிட சோர்வு அறிகுறிகள் குறைந்து இருப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக இருந்தது என்று கண்டறியப்பட்டது. உடல் செயல்பாடு, மன அழுத்தம், கவலை மற்றும் உளவியல் துயரத்து நோய் அறிகுறிகளும் பிற உளவியல் சார்ந்த சிகிச்சைகளுடன் ஒப்பிடும் போது குறைந்து இருந்தது. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் முடிவுகள் முன்னுக்குப் பின் முரணாகவும் முடிவுகள் எடுப்பதைக் கடினமாக்கும் வண்ணம் ஆய்வுகள் இணைவின்றியும் இருந்தன. மிக சில ஆய்வுகளே புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சையை ஏற்றுக் கொள்வது பற்றி விளம்பின, பக்க விளைவுகள் குறித்து எந்த ஆய்வும் சோதிக்கவில்லை. இரண்டு ஆய்வுகள் மட்டுமே புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சையின் திறன் பாட்டினை மற்ற சிகிச்சைகளோடு ஒப்பிட்டு பார்த்துள்ளன. உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் ஒரே ஒரு ஆய்வுமட்டும் நடத்தை மாற்ற சிகிச்சை மற்றும் வழக்கமான கண்காணிப்புடன் உள்ள பிற சிகிச்சைகளை இணைத்து வழங்கப்பட்ட சிகிச்சை முறையினை ஆய்வு செய்துள்ளன. நாட்பட்ட சோர்வு நோய்க்குறிக்கு புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சை மற்ற சிகிச்சைகளை விட கூடுதல் உதவியளிப்பதாக இருக்குமா அல்லது, ஒரே சிகிச்சை அணுகுமுறைகளைக் காட்டிலும் புலனுணர்வு நடத்தை மாற்ற சிகிச்சை மற்றும் வழக்கமான கண்காணிப்புடன் உள்ள பிற சிகிச்சைகளை இணைத்து வழங்கப்படும் சிகிச்சை அதிக பயனுள்ளதாக இருக்குமா என்பதை உறுதிப் படுத்த மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் .
மொழிபெயர்ப்பு: சி. தங்கசுவாமி மற்றும் சி.இ, பி.என்.அர் குழு