குழந்தைகள் மூழ்குவதை தடுப்பதற்கு, நீச்சல் குளத்தின் எல்லா பக்கங்களையும் சூழ்ந்திருக்குமாறு வேலியமைப்பது மற்றும் அதை வீட்டிலிருந்து தனிமைப்படுத்துவது திறன் மிக்கதாகும்.

பெரும்பாலான தொழில்மயமான நாடுகளில், குழந்தைகளில், குறிப்பாக இளம் குழந்தைகளில் நீரில் மூழ்குதல் அதிகமான மரணங்களை ஏற்படுத்துவதில் ஒன்றாகும். மூழ்குவதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பராமரிப்பு மிக குறைந்த அளவே உதவும் மற்றும் ஆதலால்,மூழ்குவதை தடுப்பதின் மூலமே உயிர் பிழைத்து இருப்பதற்கு சார்ந்திருக்க வேண்டும். நீச்சல் குள வேலியடைத்தல் பற்றி எந்த சோதனைகளையும் இந்த திறனாய்வு காணவில்லை. எனினும், குழந்தைகள் கண்காணிப்பின்றி நீச்சல் குளத்தை அடைதலை போதுமான அளவு தடுக்கக் கூடிய நீச்சல் குள வேலியடைப்பு, நீச்சல் குளங்களில் அனைத்து குழந்தைகளின் மூழ்குதலில் சுமார் முக்கால் பங்கு குறைக்கக் கூடும் என்று பிற ஆய்வுகளிலிருந்து ஆதாரம் கண்டது. குழந்தைகள் வீட்டின் வழியாக நீச்சல் குளத்திற்கு அணுகுவதை பெற்றிருக்கும் செயல்முறைகளை விட, நீச்சல் குளத்தின் எல்லா பக்கங்களையும் சூழ்ந்திருக்குமாறு வேலியமைப்பது மற்றும் அதை வீட்டிலிருந்து தனிமைப்படுத்துவது மிகவும் திறன் வாய்ந்ததாகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information