அழுத்தம் புண்கள் வெவ்வேறு தாங்கும் பரப்புகள் பயன்படுத்தி தவிர்க்க முடியுமா?

அழுத்தம் புண்கள் (அழுத்தம் சீல்புண்கள் மற்றும் அழுத்தம் காயங்கள் என்றும் அழைக்கப்படும் ) என்பது அசைவிழந்த நோயாளிகளுக்கு, அவர்களது எடை தாங்கும் எலும்பாலான பகுதிகளில் (இடுப்பு, குதிகால் மற்றும் முழங்கைகள் போன்ற) மீது ஏற்படும் அழுத்தம் அல்லது தேய்த்தல் காரணமாக உருவாகும் புண்கள் ஆகும் . வெவ்வேறு தாங்கும் பரப்புகள்(எ.க அழுத்தத்தை விடுவிக்கும் நோக்கம் கொண்டவை. உடலில் பாதிக்கக்கூடிய பகுதிகளுக்கு மிருதுவான மெத்தையாகி அழுத்தத்தை விடுவிக்கவும் மற்றும் மேற்பரப்பில் அழுத்தத்தை மிகவும் சமமாக விநியோகிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட அளவீட்டு அம்சங்கள் கொண்ட நுரை மெத்தை மீது படுக்கும் மக்களை விட சாதாரண மெத்தையில் படுத்திருக்கும் மக்களுக்கு அழுத்தம் புண்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று திறனாய்வில் கண்டறியப்பட்டது.கூடுதலாக ஆட்டுத்தோல் பரப்புடைய மெத்தையில் படுத்திருக்கும் மக்களுக்கு குறைந்த அழுத்தம் புண்கள் உருவானது என்றும் திறனாய்வு கண்டறிந்தது. மாற்று அழுத்த மெத்தைகளை விட மாற்று அழுத்த மெத்தை விரிப்புகள் மிகவும் செலவு குறைந்ததாக உள்ள போதிலும், நிலையான குறைந்த அழுத்தம் உடைய, குறிப்பிட்ட மற்றும் மாற்று அழுத்தம் தாங்கும் பரப்புகள் அழுத்தம் புண்களை தடுப்பதில் பயனளிக்கும் என்பதற்கான சான்றுகள் தெளிவாக இல்லை. வெவ்வேறு தாங்கும் பரப்புகளை ஒப்பிடும் தீவிரமான ஆய்வுகள் தேவையாக உள்ளது வெவ்வேறு தாங்கும் பரப்புகள் ஒப்பிடும் தரமான ஆய்வு அவசியம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: நவீன் .இ மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information