சிறுநீர் அடங்காமை என்பது அனிச்சையாக சிறு நீரை இழத்தல் ஆகும். அழுத்தம் மற்றும் உந்தப்பட்ட அடங்காமை ஆகியவை பொதுவான வகைகளாகும். இயந்திரவியல் சாதனங்கள் பிளாஸ்டிக் அல்லது மற்ற பொருட்களினால் செய்யப்படுகின்றன. அவைகள், சிறுநீர் கசிவைக் நிறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ, சிறுநீர் வடிகுழாயில் அல்லது யோனியின் உள்ளே பொருத்தப்படுகின்றன. மருத்துவ சோதனைகளின் மீதான இந்த திறனாய்வு, இயந்திரவியல் சாதனங்களை பயன்படுத்துதல், சிகிச்சையின்மையை விட சிறப்பாக இருக்கும் என்று கண்டறிந்தது, ஆனால் ஆதாரம் பலவீனமாக உள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட வகையான சாதனத்தை பரிந்துரைக்கவோ அல்லது இயந்திரவியல் சாதனங்கள், இடுப்புக் கூட்டுத்தள தசை பயிற்சி போன்ற பிற வகையான சிகிச்சைகளை விட சிறப்பாக இருக்கும் என்பதை காட்டவோ போதுமான ஆதாரங்கள் இல்லை.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.