முதுகு வலிஉள்ள தொழிலாளர்களுக்கு நோயினால் வராமை குறைக்க உடல் பக்குவப்படுத்துதல்

திறனாய்வு கேள்வி

நாங்கள் கீழ்முதுகில் வலியுடைய மக்கள் வேலைக்கு திரும்புவதற்கான யுக்தியில் ஒரு பகுதியாக உடலை பராமரிப்பது இருப்பது பற்றிய ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளோம். 25 ஆய்வுகளை நாங்கள் கண்டுள்ளோம்

பின்புலம்

உடற்பயிற்சி மூலம் சீரமைப்பின் முக்கிய நோக்கம், ஒரு நோயாளி தன் பணி செய்யும் நிலைக்கு திரும்புதல் ஆகும், அதை உடல் சீரமைப்பு, பணிக்கு உட்படுத்தல் அல்லது செயல்பாட்டிற்கு திரும்புதல் என்றும் அழைக்கலாம் மற்றும் உடற்பயிற்சி திட்டங்கள் காயப்பட்ட அல்லது ஊனமுற்ற தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்லும் நிலையில் முனேற்றமும் மாற்றமும் உருவாக்கக்கூடியதாகும். இப்படிபட்ட உடற்பயிற்சி திட்டங்களை கண்காணிப்பின் கிழ் செய்யும்போது, ஒருவேளை செயல்திறன் உருவகப்படுத்த அல்லது பணியை வேறு விதமாக செய்வது அல்லது செயல்பாட்டு திறன்களில் மாற்றம் அல்லது இரண்டு முடிவுகளும் ஏற்படகூடும். இந்த உடற்பயிற்சி திட்டங்கள் அனைத்தும் உளவியல், உடல், மற்றும், உணர்ச்சியில் சகிப்புத்தன்மை ஆகியவற்றில் பொறுமையையும் பணியின் எளிய செயலாக்கத்தை மேம்படுத்த கட்டமைக்கப்பட்டு, படிப்படியாக வகைசெயயப்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழ்நிலைகளில், காயபட்ட தொழிலாளர்கள் தங்கள் சாதாரண உடல் நிலையிலிருந்து உடற்பயிற்சி திட்டங்கள் மூலமாக உடல் சக்தியில் முனேற்றமும், பொறுமையையும், உடல் நெகிழ்வையும் மற்றும் இருதய உடற்பயிற்சியையும் நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். உடல் சீரமைப்பு மற்ற சிகிச்சை முறைகளுக்கு மேலும் இன்னும் குறைவாக முக்கியாமாக உடற்பயிற்சி சிகிச்சை முறையில் வேறுபாடுகள் இருக்குமோ என்று நாங்கள் அறிய விரும்பினோம்.

ஆய்வு பண்புகள்

இந்த ஆதாரம் மார்ச் 2012 நிலவரப்படியானவை. கீழ்முதுகு வலியுள்ளவர்கள் வேலை திரும்புவதற்கான ஒரு பகுதியாக உடல் சீரமைப்பு விளைவு பற்றிய ஆதாரங்கள் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். ஒரு சில ஆய்வுகள் உடல் சீரமைப்பையும் கூடுதாலாக பாதுகாப்பு அம்சங்களை மட்டும் பரிசோதித்தது. மற்றும் சில ஆய்வுகள் உடல் சீரமைப்பையும் மற்ற சிகிச்சை முறைகளோடு உதாரணமாக தரநிலை உடற்பயிற்சி சிகிச்சையை பரிசோதித்தது. ஆய்வில் பங்குபெற்ற நோயாளிகளுக்கு ஒரு சிலருக்கு கடுமையான இடுப்பு வலியும்(வலியின் நேரம்-ஆறு வாரங்களக்கு குறைவாக), கூர்மைகுறைந்த இடுப்பு வலி (வலியின் நேரம்-ஆறு வாரங்களக்கு மேலாக ஆனால் 12 வாரங்களுக்கு குறைவாக), அல்லது நாள்பட்ட இடுப்பு வலி (வலியின் நேரம்-12 வாரங்களுக்கும் மேலாக). ஆய்வில் பங்குபெற்ற நோயாளிகள் அனைவரும் கிட்டத்தட்ட முன்று வாரத்திலிருந்து மூன்று வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறார்கள். உடல் சீரமைப்பு முறையை எளிது மற்றும் கடிணம் என்ற இரு பிரிவுகளாக உடற்பயிற்சியின் தீவிரத்தையும், மற்றும் அதன் நேர அளவைக்கொண்டு நாங்கள் பிரித்தோம்.

முக்கிய முடிவுகள்

எளிய உடற்பயிற்சி முறைகள் நோயாளிகளின் பணி விடுமுறை நாட்களில் கூர்மைகுறைந்த மற்றும் நாள்பட்ட இடுப்பு வலிகளில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன. கடினமான உடற்பயிற்சி செய்த கூர்மைகுறைந்த வலிகொண்ட தொழிலாளர்களின் முடிவுகளில் வேறுபாடுகள் காணப்பட்டது. கடினமான உடற்பயிற்சி சீரமைப்பு முறை நாள்பட்ட வலிக்கொண்ட நோயாளிகள் மத்தியில் மற்ற சாதாரண தொழிலாளர்களின் நிலையை ஒப்பிடும்போது தங்கள் மருத்துவ விடுப்பு 12 மாதமாக இருந்தது ஒரு சிறிய விளைவாக காணப்படுகிறது. மருத்துவ விடுப்பின் குறைப்பு ஒரு நல்ல முடிவாக இருந்தும், உடற்பயிற்சி சீரமைப்பு முறை மற்றும் பணியின் அமைப்பு ஆகிய இவைகள் சிகிச்சையின் மேலாண்மை இந்த மாற்றத்தை கொடுத்திருக்கலாம், ஆனால் இதைக்குறித்து மேலும் ஆய்வுகள் அவசியமாக உள்ளது.

சான்றின் தரம்

ஆய்வு முடிவு ஆதாரங்கள் மிகக்குறைந்த தரத்திலிருந்து மிதமான தரம் அளவீட்டிலே கிடைக்கப்பெறுகின்றன. சேர்க்கப்பட்டுள்ள 16 ஆய்வுகளும் நன்கு வடிவமைக்கப்பட்டவை மற்றும் அவற்றில் எந்த ஒரு முக்கிய குறைபாடும் இல்லை என்ற போதும் சில ஆய்வுகள் மோசமாக நடத்தப்பட்டது. இதில் பொதுவாக குறைந்த எண்ணிக்கையில் இருந்த பங்கேற்பாளர்கள் ஒட்டுமொத்த ஆதாரத்தின் தரத்தை குறைத்து.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு குறிப்புகள் CD001822.pub3

Tools
Information