உடலின் வெப்ப நிலையை குறைத்தல் , இதயத் தமனி மாற்று வழி அறுவை சிகிச்சையை தொடர்ந்த நரம்பியல் சேதத்தை குறைக்கும் என்பதை காட்ட போதுமான ஆதாரம் இல்லை.

கடுமையான இதயத் தமனி (இதயம்) நோய் கொண்ட மக்களுக்கு, மாற்று வழி அறுவை சிகிச்சை உயிர் காப்பதாக இருக்கக் கூடும். எனினும், மாற்று வழி அறுவை சிகிச்சை, சில நேரங்களில் நரம்பியல் சம்மந்தமான சிக்கல்களோடு தொடர்பு கொண்டிருக்கும், எப்போதாவது நோயாளிகள் பக்கவாதத்தால் அவதிப்படுவர், அல்லது மிக பொதுவாக, ஞாபகத்திறன் அல்லது தனிமனித இயல்பு ஆகியவை பாதிக்கப்படக்கூடும். அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வெப்ப நிலை இந்த பாதக விளைவுகளை பாதிக்கக் கூடும். அறுவை சிகிச்சையின் போது வெப்ப நிலையை குறைத்தல் (ஹைபோதெர்மியா), மூளையை பாதுகாத்து சிக்கல்களின் அபாயத்தை குறைக்கக் கூடும். இந்த சோதனைகளின் திறனாய்வு, ஹைபோதெர்மியாவின் பாதுகாப்பு விளைவுகளைக் காட்ட போதுமான ஆதாரத்தை காணவில்லை. அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information