மல்டிபிள் ஸ்கலரோசிஸ் (எம்எஸ்) என்பது இளைய மற்றும் நடுத்தர-வயதினரை பாதிக்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு நாள்பட்ட நோயாகும். எம்எஸ், நரம்புகளின் மின் கணத்தாக்குதல்களை கடத்தும் திறன் தகர்ப்பை ஏற்படுத்தி தசை பலவீனம், அயர்ச்சி மற்றும் கை கால்களின் மீதான கட்டுப்பாடு இழப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழி நடத்தும். எம்எஸ் உள்ள மக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைகளில் உடலியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்குபெற முயற்சிப்பதற்கு ஆக்குபேசனல் தெரபி (ஓடி) உதவுகிறது. ஓடி மூலம் அயர்ச்சி முன்னேறக் கூடும் என்பதற்கு சில பரிந்துரைப்பு இருந்தாலும், எம்எஸ் உள்ள மக்களுக்கு விளைவுகளை மேம்படுத்தும் என்பதற்கு நம்பகமான ஆதாரம் தற்போது இல்லை என்று இந்த திறனாய்வு கண்டது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.