மல்டிபிள் ஸ்கலரோசிஸ்-ற்கான உடற்பயிற்சி சிகிச்சையின் தாக்கம்

எம்எஸ் என்பது மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு நாள்பட்ட நோயாகும். நரம்புகளின் மைளின் உறையுடைய மாறுபாடான சேத பகிர்வு, வலிமை, உணர்ச்சி, இணக்கம், மற்றும் சமநிலை இழப்புக்கு வழி நடத்தி, கடுமையான மற்றும் முன்னேறத்தக்க அன்றாட வாழ்க்கை செயல்பாட்டு வரம்புகளுக்கு காரணமாகி விடும். இன்றைய தேதி வரை, எம்எஸ்-ற்கு திறன்மிக்க சிகிச்சை எதுவும் இல்லை, எனினும், எம்எஸ் கொண்ட நோயாளிகளின் அன்றாட செயல்பாட்டினை மேம்படுத்த நோக்கம் கொண்ட உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகள் திறன் மிக்கவையாக உள்ளன என்று கணிசமான ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இந்த திறனாய்வில், எம்எஸ் நோயாளிகளுக்கு உடற்பயிற்சி சிகிச்சையின் மீதான ஒன்பது சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகள் சேர்க்கப்பட்டன, அவற்றில் ஆறு ஆய்வுகள் எந்த சிகிச்சையும் இல்லாமையை (சிகிச்சையின்மை) ஒப்பீடாக பயன்படுத்தின. சிகிச்சையின்மையை ஒப்பிடும் போது, தசை செயல்பாடு, மற்றும் அசைவாற்றலை பொறுத்தமட்டில், உடற்பயிற்சி சிகிச்சைக்கு அனுகூலமாக உறுதியான ஆதாரம் இருந்தது, ஆனால் ஒரு ஆய்வில் மட்டும் மேம்பட்ட அயர்ச்சிக்கு எந்த ஆதாரமும் காணப்படவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இலக்குடைய உடற்பயிற்சி திட்டமும் பிறவற்றை காட்டிலும் அதிக வெற்றிக்கரமாக இருக்கவில்லை. சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகளில், எந்த தீங்கு ஏற்படுத்தும் விளைவுகளும் விளக்கப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information