நீண்ட-கால பராமரிப்பில் உள்ள வயதான மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதில் புனர்வாழ்வு சிகிச்சைகள் திறன் மிக்கவையாக இருக்கக் கூடும். 2010-ல் உலகின் மக்கள் தொகையில் 7.6% 65 வயதுக்கு மேலாக இருந்தவர்கள், மற்றும் இது 2035-க்குள் 13% வரை அதிகரிக்க கூடும் என்று கணிக்கப்படுகிறது. இது நீண்ட-கால வதிவு பராமரிப்பின் கிராக்கியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளின், எடுத்துக்காட்டிற்கு, பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்களில் நடத்தல் மற்றும் ஆடை அணிந்து கொள்ளுதல், சீர்குலைவை தடுப்பதற்கான வழிகளின் நாட்டத்தை அதிகரித்துள்ளது, உடலியல் புனர்வாழ்வு (உடற்பயிற்சி செய்வதை அடிப்படையாக கொண்டுள்ள சிகிச்சை தலையீடுகள்) ஒரு பங்கு வகிக்கக் கூடும், மற்றும் இந்த திறனாய்வு கிடைக்கப் பெற்றுள்ள ஆதாரத்தை ஆராய்கிறது. இந்த திறனாய்வு 67 சோதனைகளை உள்ளடக்கியது, அவற்றில் 36 வட அமெரிக்காவிலும், 20 ஐரோப்பாவிலும் மற்றும் ஏழு சோதனைகள் ஆசியாவிலும் நடத்தப்பட்டன. மொத்தமாக, 83 வருடங்களை சராசரி வயதாக கொண்டிருந்த 6300 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. பெரும்பாலான சிகிச்சை தலையீடுகள், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளின் சிரமங்களை ஏதாவது ஒரு விதத்தில் கருத்தில் கொண்டிருந்தன. அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள், தசை வலிமை, நெகிழ்வு, சமநிலை, மனநிலை, புலனுணர்வு (ஞாபக சக்தி மற்றும் சிந்தனை), உடற்பயிற்சி சகிப்புத் தன்மை, கீழே விழுவதை பற்றிய பயம், மரணம், உடல்நலக் குறைவு, மற்றும் காயங்கள் போன்ற சிகிச்சை தலையீட்டோடு தொடர்புடைய தேவையற்ற விளைவுகள் மீது உடலியல் புனர்வாழ்வின் விளைவுகளை இந்த திறனாய்வு விசாரித்தது. சோதனைகள் இடையேயான வேறுபாடுகள் நிமித்தம் எங்களால் குறிப்பிட்ட பரிந்துரைகளை ஏற்படுத்த முடியாத போதிலும்,வெவ்வேறு உடலியல் புனர்வாழ்வு வகைகளில் பங்கு பெற்றதினால் உடலியல் ஆரோக்கியத்தில் நன்மைகள் ஏற்பட்டதை எடுத்துக் காட்டுவதில் தனிப்பட்ட ஆய்வுகள் வெற்றிக்கரமாக இருந்தன.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.