பெரியவர்கள் மத்தியில் முதுகுவலி பொதுவாக காணப்படுகிறது. அதிக எடை தூக்கும் அல்லது நகர்த்தும் தொழிலை வாடிக்கையாக கொண்ட மக்களுக்கு முதுகில் தரிப்புதங்கள்(strain) அதிகரிக்கும் வாய்ப்பும் முதுகு வலி வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. பல தொழில்களில் இதை தவிர்க்க முடியாது. சரியான தூக்கும் முறைகளில் பயிற்சி அளித்தல், இயந்திர உதவி பயன்பாடு (துணை சாதனங்கள் ) முதுகு வலியைத் தடுக்க முக்கியமான நுட்பங்களாக கருதப்படுககிறது.
நாங்கள் ஒன்பது சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளையும் ( 20,101 ஊழியர்கள்) மற்றும் ஒன்பது குழுக்களின் (cohort) ஆய்வுகளையும் (1280 ஊழியர்கள்)சேர்த்துள்ளோம். இதில் கீழ்முதுகு வலி மற்றும் முதுகு தொடர்பான இயலாமையை தடுப்பதற்கான சரியாக துாக்கும் பயற்சி மற்றும் துணை சாதனங்களை உபயோகித்தள் பயிற்சி ஆகியவற்றின் விளைவுகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதுகுவலிகயின் சிகிச்சையாக சரியாக துாக்கும் பயற்சி மற்றும் துணை சாதனங்கள் உபயோகித்தள் ஆகியவற்றின் திறனை எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளவில்லை என்பதை கண்டறிந்தோம்.
முதுகுவலி மற்றும் முதுகு சார்ந்த இயலாமையில் பாதிக்கப்பட்ட மக்களில் சரியான துாக்கும் பயற்சியும், துணை சாதனங்கள் பயிற்சியும் மேற்கொண்ட மக்கள் எந்த பயிற்சியும் செய்யாத அல்லது ,சிறு ஆலோசனை, தொழில்முறை கல்வி, முதுகு பெல்ட் அல்லது உடற்பயிற்சி மேற்கொண்ட மக்கள் ஆகிய இரு பிரிவு மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை ஒப்பிடுகையில் எந்த வித வேறுபாடும் இல்லை என்பதற்கான மிதமான தரம் கொண்ட சான்றுகளை கண்டுள்ளோம். இதுபோன்று தீவிர பயிற்சி மேற்கொண்ட மக்கள் அல்லது குறுகிய ஆலோசனை கொண்ட மக்களுக்கு இடைய முதுகு வலியில் எந்த வித வேறுபாடும் இல்லை. குறுகிய அல்ல நீண்டகால இடைவெளிகளில் மற்றும் சமவாய்ப்புக் கட்டுப்பாட்டு சோதனை அல்ல குழுசார் சோதனைகளிலும் இந்த முடிவுகளில் எந்த வேறுபாடும் காணவில்லை.
இத்திறனாய்வின் முடிவுகள் மற்ற தடுப்பு முறையை மையமாக கொண்ட திறனாய்வுகளைப் போலவே உள்ளது. சில திறனாய்வுகளில் பயிற்சி மேற்கொண்ட மக்களுக்கு திருப்தியும் அதை குறித்த அறிவும் பெருகியதாக கூறுகின்றனர் ஆனால் அது நடத்தையில் நிலையான மாற்றம் ஏற்படுத்தியதாக தோன்ற வில்லை.
முடிவாக இதில் முதுகு வலியைத் தடுக்க பொருட்களை கையாளும் முறையான தொழில் நுட்பபயிற்சி, மற்றும் துணை சாதனங்கள் வழங்குதல் ஆகியவற்றால் எந்த வித பயனும் இல்லை என்று உறுதிப் படுத்தியுள்ளனர். விளைவுகள் பற்றிய மதிப்பீட்டில் நமக்குள்ள நம்பிக்கையில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் மற்றும் மதிப்பீடுகள் மாறவும் இனி வரும் ஆராய்ச்சிகள் வழி வகுக்கலாம்.
மொழிபெயர்ப்பு: பிறைசூடன் ஜெயகாந்தன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு