பின்புலம்
இதயத்தமனி நோய் (கார்டியோ-வாஸ்குலர் டிசீஸ், சிவிடி) என்பது, இதயம் மற்றும் இரத்த குழாய்களை பாதிக்கும் நிலைமைகளின் குழுவை குறிக்கிறது. சிவிடி, ஒரு உலகளாவிய சுமையாக உள்ளது மேலும் இவை பிரதேசங்களுக்கு இடையே வேறுபடுகிறது, மற்றும் இந்த மாறுபாட்டின் ஒரு பங்காக, உணவுமுறை காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய காரணிகள் முக்கியமானவை, ஏனெனில் சிவிடி-யை தடுப்பது மற்றும் அதின் மேலாண்மைக்கு உதவியாக இவற்றை மாற்றியமைக்க முடியும். ஒரு ஒற்றை இணைப்பாக உபரி வைட்டமின் கே-யை உட்கொள்ளுதல்; இதயத்தமனி நோய் மரணம், அனைத்து-காரண மரணம், உயிருக்கு-ஆபத்தில்லாத இறுதிமுனைகள் (மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் ஆன்ஜினா போன்ற) மற்றும் ஆரோக்கியமான வயது வந்தவர்களில் சிவிடி-க்கான ஆபத்து காரணிகள் மற்றும் சிவிடி-க்கான உயர் அபாயத்தையுடைய வயது வந்தவர்கள் முதலியவற்றை குறைப்பதற்கான திறனை இந்த திறனாய்வு மதிப்பீடு செய்தது.
ஆய்வு பண்புகள்
வைட்டமின் கே-யை உபரியாக உட்கொள்ளுதல், ஆரோக்கியமான பெரியவர்களில் அல்லது சிவிடி உருவாவதற்கான உயர் அபாயத்தையுடையவர்களில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்ட சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளுக்காக (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிகிச்சை குழுக்கள் ஒன்றில் பங்கேற்பாளர்களை சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யும் மருத்துவ சோதனைகள்) அறிவியல் தரவுத்தளங்களை நாங்கள் தேடினோம். ஏற்கனவே சிவிடி உடையவர்களை (எ.கா. மாரடைப்பு மற்றும் பக்கவாதம்) நாங்கள் சேர்க்கவில்லை. இந்த ஆதாரம், செப்டம்பர் 2014 வரை தற்போதையது.
முக்கிய முடிவுகள்
ஒரே ஒரு சிறிய சோதனை மாத்திரம் எங்களின் சேர்க்கை அடிப்படை தகுதிகளை சந்தித்தது. அது, 40 முதல் 65 வயதுள்ள 60 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. இந்த ஆய்வு, ஆரோக்கியமான பங்கேற்பாளர்களில் சிவிடி-யுடைய ஆபத்து காரணிகளான (இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகள்) மீது வைட்டமின் கே 2 -வை உபரியாக உட்கொள்வதின் பாதிப்புகளை மூன்று மாதங்களுக்கு மேலாக ஆராய்ந்தது. ஒப்பீட்டு குழுக்கள் இடையே ஆபத்து காரணிகளில் எந்த வேறுபாடுகளும் காணப்படவில்லை, எனினும் இது ஒரு சிறிய ஆய்வாக இருந்தது மற்றும் கண்டுபிடிப்புகள் வரம்பிற்குட்பட்டுள்ளது. இந்த ஆய்வு சிறியதாயும் குறுகிய காலத்திற்கு உட்பட்டிருந்த காரணத்தால், இறப்பிற்குரிய மற்றும் இறப்பிற்குரிய-அல்லாத இதயத்தமனி நோய் இறுதி முனைகளை கண்ணோக்கவில்லை.
தற்போது, ஆதாரம் மிகவும் வரம்பிற்கு உட்பட்டுள்ளது, சிவிடி-யை தடுப்பதில் வைட்டமின் கே-யை உபரியாக உட்கொள்ளுதலின் திறனை நிர்ணயிக்க மேற்படியான உயர்-தர சோதனைகள் தேவையாக உள்ளது.
சான்றின் தரம்
இந்த திறனாய்வில் அடையாளம் காணப்பட்ட ஒரே ஒரு சோதனை, ஒரு தலை சார்பிற்கான குறைந்த அபாயத்தை உடையதாக தீர்மானிக்கப்பட்டது. (எனவே, பங்கேற்பாளர்களின் அல்லது ஆராய்ச்சியாளர்களின் பாரபட்சம் நிமித்தமாக தவறான முடிவுகளை எட்டுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது). எனினும், இந்த ஆதாரம், ஒரு சிறய சோதனைக்கு வரையறுக்கப்பட்டிருக்கிறது மற்றும் எந்த ஒரு உறுதியான முடிவையும் இந்த நேரத்தில் எட்ட முடியாது.
மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.