திறனாய்வு கேள்வி
குறைந்த- மற்றும் நடுத்தர-வருமான நாடுகளில் (லோ அண்ட் மிடில் இன்கம் கண்ட்ரிஸ், எல்எம்ஐசி-ஸ்) இதயத்தமனி நோயின் முதல் நிலை தடுப்பில் ஒன்றுக்கும் மேலான இதயத்தமனி அபாய காரணியை குறைப்பதை நோக்கமாக கொண்ட ஆரோக்கிய ஊக்க சிகிச்சை தலையீடுகளின் (பல அபாய காரணி சிகிச்சை தலையீடு) திறனை இந்த திறனாய்வு ஆராய்கிறது. அதிக உடல் எடை/ பருமன், உயர் இரத்த அழுத்தம், புகை பிடித்தல், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் அல்லது குறைந்த உடல் இயக்க நிலைகள் ஆகியவை அத்தகைய அபாய காரணிகள் ஆகும்.
பின்புலம்
பல அபாய காரணி சிகிச்சை தலையீடுகள், இதயத்தமனி நோயின் (கார்டியோ-வேஸ்குலர் டிசிஸ், சிவிடி) நிகழ்வுகள் குறைவதற்கு வழி வகுக்கவில்லை என்று உயர்-வருமான நாடுகளிலிருந்து ஆதாரம் சுட்டிக் காட்டுகிறது சிவிடி ஏற்படுவது அதிகரித்து வருவதும் மற்றும் எல்எம்ஐசி-ஸில் சிவிடி ஆரோக்கிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலும், இத்தகைய திட்டங்கள் பலன் தரும் விளைவுகளை கொண்டிருக்க கூடிய சாத்தியம் உள்ளது. இந்த சூழலை மேம்படுத்துவதில், எல்எம்ஐசி-ஸ் தகவல் அளிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்க திறனடைவதற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொடர்புடைய ஆதார குழுமம் ஒரு இன்றியமையாத மூலகமாகும். (அ) ஆரோக்கிய உணவு முறை பழக்கங்களை ஊக்குவிப்பதற்கான உணவு திட்ட அறிவுரை (ஆ) தீமை விளைவிக்கும் மது உட்கொள்ளுதலை குறைத்தல் (இ) சிகரெட் புகைப்பதை நிறுத்துவதற்கான அறிவுரை (ஈ) அன்றாட உடல் இயக்க நடவடிக்கையை அதிகரிப்பதற்கு அறிவுரை; மற்றும் (உ) உடல் எடையை குறைத்தல் ஆகியவற்றை ஆரோக்கிய ஊக்க சிகிச்சை நடவடிக்கைகள் உள்ளடக்கும்.
ஆய்வு பண்புகள்
ஜூன் 2014 வரையிலான மருத்துவ இலக்கியத்தின் ஒரு முழுமையான தேடலை நாங்கள் நடத்தினோம். 7310 பங்கேற்பாளர்களை ஆளெடுத்த 13 சோதனைகளை நாங்கள் கண்டோம். இரண்டு சோதனைகள் ஆரோக்கியமான பங்கேற்பாளர்களை சேர்த்தது, மற்றும் பிற 11 சோதனைகள், அறியப்பட்ட ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்டிருந்த பங்கேற்பாளர்கள் போன்று வெவ்வேறு சிவிடி அபாயத்தை கொண்டவர்களை சேர்த்து, அவர்களை பல அபாய காரணி சிகிச்சை தலையீடுகளுக்கு அல்லது சிகிச்சையின்மைக்கு சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்தன. இந்த சோதனைகள் 2001-2010 இடையே நடத்தப்பட்டிருந்தன, மற்றும் 2004-2012 இடையே வெளியிடப்பட்டிருந்தன. மூன்று சோதனைகள் துருக்கியில் நடத்தப்பட்டன. இரண்டு சோதனைகள் சீனா மற்றும் மெக்ஸிகோ-வில் நடத்தப்பட்டன. ஒரு சோதனை, சீனா மற்றும் நைஜிரியா-விலிருந்து பங்கேற்பாளர்களை சேர்த்தது. பிற சோதனைகள், பிரேசில், இந்தியா, பாகிஸ்தான், ரோமானியா, மற்றும் ஜோர்டனில் நடத்தப்பட்டன. சிகிச்சை தலையீடுகளின் உட்பொருள் சோதனைகளிடையே வேறுப்பட்டது; பெரும்பாலான சோதனைகள் உணவுமுறை திட்ட அறிவுரை மற்றும் உடல் இயக்க நடவடிக்கை பற்றிய அறிவுரையை உள்ளடக்கின. ஆறு மாதங்கள் முதல் முப்பது மாதங்கள் வரை ( சராசரி பின்-தொடர்தல் காலம் 13.3 மாதங்கள் ஆகும்) சோதனைகள் பங்கேற்பாளர்களை பின் தொடர்ந்தன.
முக்கிய முடிவுகள்
ஒரே ஒரு சோதனை மட்டுமே அறிக்கையிட்ட இதயத்தமனி நோய் நிகழ்வுகள் மேலான விளைவுகளின் பற்றாக்குறையான ஆதாரத்தை நாங்கள் கண்டோம். எந்த காரணத்தாலும் ஏற்பட்ட மரணங்களை, சேர்க்கப்பட்டிருந்த எந்த சோதனைகளும் உள்ளடக்கவில்லை. பல அபாய காரணி சிகிச்சை தலையீடுகள், சிஸ்டாலிக் இரத்த அழுத்தம், டையாஸ்டாலிக் இரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண், மற்றும் இடை சுற்றளவு ஆகியவற்றை குறைக்கக் கூடும். அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல், புகைப்பிடித்தலை நிறுத்துதலின் வீதம், கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இரத்த குளுகோஸ் சர்க்கரை அளவு, உண்ணாவிரத இரத்த சர்க்கரை, உயர் அடர்த்தி லிப்போப்ரோடீன், குறைந்த அடர்த்தி லிப்போப்ரோடீன் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்கு எந்த வித்தியாசத்தையும் நாங்கள் காணவில்லை. தீங்குகளை பற்றி சேர்க்கப்பட்டிருந்த எந்த சோதனைகளும் அறிக்கையிடவில்லை.
ஆதாரத்தின் தரம்
ஒட்டுமொத்தமாக, இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகள் ஓரளவு ஒரு தலை சார்பு அபாயத்தை கொண்டிருந்தன, மற்றும் நாங்கள் தரவை பகுப்பாய்வு செய்த போது, ஆய்வுகளின் முடிவுகளிடையே வேறுபாடு இருந்தது. எங்களின் முடிவுகள் சிறிது கவனத்துடன் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.