பின்புலம்
அழுத்தப் புண்கள் (படுக்கை புண்கள் என்றும் அழைக்கப்படும்) என்பவை இடுப்பு, குதிகால், அல்லது கீழ் முதுகு போன்ற உடலின் எடை-தாங்கும் மையங்களில் விடுவிக்கப்படாத அழுத்தத்தால் தோல் அல்லது அதின் கீழுள்ள திசுக்களில் ஏற்படும் புண்களாகும். இந்த புண்கள் ஏற்படுவதற்கு அதிக அபாயத்தை, குறைவான இயக்கத்தை கொண்டுள்ள மக்கள் கொண்டிருப்பர். ஆதலால், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதினால் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் இப்புண்கள் ஏற்படக்கூடிய அபாயத்தை கொண்டுள்ளனர். அழுத்தப் புண்கள் குணப்படுத்துவதற்கு கடினமாகவும் மற்றும் தொற்று மற்றும் பிற சிக்கல்களுக்கு எளிதில் பாதிக்கப்பட கூடியதாகவும் இருக்கும். சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்களில் இந்தப் புண்கள் ஏற்படும் போது, உட்காரும் நிலையில் உடல் எடையை தாங்கக்கூடிய பகுதியில் அழுத்தத்தைத் நீக்க படுக்கை ஓய்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. உட்கார்ந்திருப்பதிலிருந்து படுத்துக் கொள்வதற்கு மாறுவது புண் குணமாகுதலை மேம்படுத்துவதாக எண்ணப்படுகிறது.
திறனாய்வு கேள்வி
சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்களில் அழுத்தப் புண்களை குணப்படுத்துவதற்கு படுக்கை ஓய்வின் தாக்கத்தை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் விரும்பினோம். எந்தவொரு அமைப்பிலும் (மருத்துவமனை, நர்சிங் ஹோம், நபரின் வீடு) சக்கர நாற்காலி பயன்படுத்தும் எந்த வயதினரும் மற்றும் அழுத்த புண்களை கொண்டவரை உள்ளடக்கிய ஆய்வுகள் தகுதி வாய்ந்ததாக கருதப்பட்டன.
நாங்கள் கண்டது என்ன
சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்களில் அழுத்தப் புண்களை குணப்படுத்துவதற்கான படுக்கை ஓய்வு மற்றும் படுக்கை ஓய்வு இல்லாமையை ஒப்பிட்ட சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு அக்டோபர் 2016-ல் மருத்துவ இலக்கியத்தை பரந்தளவில் தேடினோம். இந்த தலைப்பில் நடத்தப்பட்ட எந்த சோதனைகளையும் நாங்கள் காணவில்லை. இதென்னவென்றால், சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்களில் அழுத்தப் புண்கள் குணமாகுதலை படுக்கை ஓய்வு மேம்படுத்தக் கூடும் , அல்லது இந்த சிகிச்சையின் நன்மை தீமைகள் என்னவாக இருக்க கூடும் என்பதை எங்களால் சொல்ல இயலாது. சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்களில் அழுத்தப் புண்களை படுக்கை ஓய்வு அல்லது படுக்கை ஓய்வு அல்லாமல் குணப்படுத்துவதை ஒப்பிடும் சோதனைகள் தேவைப்படுகின்றன.
இந்த எளியமொழி சுருக்கம் அக்டோபர் 2016-ன் படி நிலவரப்படியானது.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்