திறனாய்வு கேள்வி
மருந்துகளை பயன்படுத்துவதின் மூலம் பருமனான குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எடையை குறைக்க இயலுமா? மற்றும் அவை பாதுகாப்பானதா?
பின்னணி
உலகமெங்கும் மேலும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எடை கூடி பருமனாகின்றனர். இந்த குழந்தைகளும் இளவயதினரும் இந்த வயதிலும் பின்னர் வாழ்வில் உடல் நல ப்ரிச்சினைகளை. திறன்பட கையாளுவதற்கு மேற்கொள்ளும் வாழ்க்கை முறை மாறுதல்கள் ( உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் ஆலோசனை) குறைந்த அளவே செயல்படுவதால் மேலும் இதைகுறித்த விவரங்கள் தேவைபடுகிறது.
ஆய்வு பண்புகள்
நாங்கள் 21 சீரற்ற முறையில் கட்டுபடுத்தப்பட்ட ஆய்வுகள் ( ஒன்று அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு உட்பட்ட குழுக்கள்) பல்வேறு மருந்துகளை ஒப்பிடுதல், மற்றும் மருத்துவ சிகிச்சை குழுவின் நடத்தையை மாற்றக்கூடிய உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி அல்லது இரண்டும் ( சிகிச்சையை பெறும் குழு) வழக்கமாக மருந்து போலி ( அதே மருந்தை போன்ற சாயல்) கூடுதாலாக நடத்தையை மாற்றக்கூடிய மருந்துகள் ( ஒப்பிடும் குழு) நாங்கள தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் எட்டு மருத்துவ ஆய்வுகளை கண்டறிந்து இந்த ஆய்வில் சேர்த்துள்ளோம் ( இன்னும் முடிவு பெறவில்லை) இந்த ஆய்வில் 2484 குழந்தைகளும், இளம் வயதினரும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வுகளின் நேரடி குறுக்கிடு காலம் 12 வாரங்கள் முதல் 48 வாரங்களாகும். பின் தொடர்வின் ஆய்வு காலங்கள் 6 மாதங்கள் முதல் 100 வாரங்களாகும்.
முக்கிய முடிவுகள்
இந்த ஆய்வில் சேர்த்துகொள்ளபட்ட metformin ( 10 ஆய்வுகள்) sibutramine ( 6 ஆய்வுகள்), orlistat (4 ஆய்வுகள்) மற்றும் ஒரு ஆய்வு, அதில் metformin னும் fluoxetine னும் சேர்ந்து ஒரு குழவின் தன்மையும் ஆராயப்பட்டன. கூடுதாலாக இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளில், metformin ( நான்கு ஆய்வுகள்), topiramate ( 2 ஆய்வுகள்) மற்றும் exenatide ( 2 ஆய்வுகள்).
பெரும்பாலான ஆய்வுகள் உடல் நிறை குறியீட்டெண் மற்றும் உடல் எடையை குறித்த தகவலை காண்பிக்கிறது. உடல் நிறை குறியீட்டெண் உடலின் கொழுப்பின் அளவை உடல் எடை மற்றும் உயரத்தையும் கொண்டு அளவிடப்படுகின்ற ஒரு எண்ணிக்கையாகும்.(kg/m2.). குழந்தைகளில், உடல் நிறை குறியீட்டெண்ணை அடிக்கடியாக அளவிட அவர்களின் வளர்ச்சிகேற்ப குழந்தையின் பாலினம், எடை மற்றும் உயரம் ஆகியவை கணக்கில் கொண்டு அளக்கப்படுகிறது (BMI z score). ஒப்பிட்டுக்குழுவில் முழுவதுமாக உடல் நிறை குறியீட்டெண் சராசரி மாற்றமாக 1.8 kg/m2 குறைந்த நிலையிலிருந்து 0.9 kg/m2 உயர்ந்த நிலையிலும், மறுபக்கத்தில் மருந்தை எடுத்துக்கொண்ட குழுவில் முழுவதுமாக சராசரி குறைந்த நிலையாக அதிகமாக உச்சரிக்கப்படுகிறது (1.3 kg/m2 குறைப்பு). இதே விளைவு எடை மாற்றத்திலும் காணப்பட்டது: மருந்தை எடுத்துக்கொண்ட குழுவில் சராசரியாக குழந்தைகளும் மற்றும் டீன்-ஏஜ் சார்ந்தவர்கள், ஒப்பிட்டுக்குழுவின் குழந்தைகளும் மற்றும் டீன்-ஏஜ் சார்ந்தவர்களை காட்டிலும் 3.9 கிலோ எடையை இழந்து உள்ளனர். ஆய்வின் ஆசிரியர்களின் அறிக்கைப்படி, மருந்தை எடுத்துக்கொண்ட 1000 பங்கேற்பாளர்களில் 24 நபர்கள் விகிதம் மோசமான பக்கவிளைவுகளும், ஒப்பிட்டுக்குழுவிலோ 1000 பங்கேற்பாளர்களில் 17 நபர்கள் விகிதம் மோசமான பக்கவிளைவுகள் தகவல் செய்யப்பட்டுள்ளது. பக்க விளைவின் காரணமாக மருந்தை எடுத்துக்கொண்ட 1000 பங்கேற்பாளர்களில் 40 நபர்களும், ஒப்பிட்டுக்குழுவிலோ 1000 பங்கேற்பாளர்களில் 27 நபர்களும் ஆய்விலிருந்து விலகிக்கொண்டனர். Orlistat மற்றும் metformin அவ்யுகளில் மிக சாதாரணமாக வயிற்று பிரச்சினைகள் பக்கவிளைவாக கண்டறியப்பட்டது( முக்கியமாக வயிற்று போக்கு மற்றும் மிதமான வயிற்றுவலி). sibutramine ஆய்வுகளில் அதிகரித்த இதயத்துடிப்பு (tachycardia), மலச்சிக்கல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் சாதாரண பக்கவிளைவாக கண்டறியப்பட்டுள்ளது. fluoxetine ஆய்வில் உலர்ந்த வாயும் மற்றும் வயிற்றுபோக்கும் பக்கவிளைவாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரு ஆய்வு உடல்நிலை சம்பந்தம்பட்ட வாழ்க்கை தரத்தை குறிப்பிட்டு ( உடல், மனநிலை, உணர்ச்சி மற்றும் சமுகசெயல்படுகள் ஆகியவற்றை கணக்கிட்டு) மருந்தை உட்கொண்ட குழுவிற்கும், ஒப்பிட்டுக்குழுவிற்கும் எந்தவிதமான குறிக்கப்பட்ட வித்தியாசத்தை காணவில்லை. எந்த ஆய்வும் பங்கேற்பாளர்களின் சமுக பொருளாதாரத்தையோ அல்லது மருந்தின் தன்மையை கொண்ட கருத்துகளையோ குறிப்பிடவில்லை. ஒரு ஆய்வு மாத்திரம் கொடுக்கப்பட்ட மருந்தின் நோயுற்ற தன்மையையும் ( ஒரு முக்கியமான இடத்தில் எத்தனை முறையாக ஒரு நோய் தோன்றுகிறது) அதன் தொடர்பையும் குறிப்பிட்டுள்ளது, orlistat சிகிச்சைக்குப்பின் மேலும் அதிகமான பித்தக்கற்கள் உண்டானதா? ஆய்வின் ஆசிரியர்கள் orlistat ஆய்வில் ஒரு தற்கொலை சம்பவத்தை பதிவுசெய்துள்ளனர். எப்படியிருப்பினும், இந்த ஆய்வு நீண்ட காலம் மேற்கொள்ளப்பட்டதால் இறப்பின் காரணத்தை நம்பகமான முறையில் அறிய இயலவில்லை. எந்த ஆய்வும் எடை கூடிய குழந்தைகளுக்கு மருந்து மூலம் சிகிச்சை என்ற முறையை குறித்து ஆராயவில்லை. ( உடல் பருமனான சிறுவர்கள் அதிக எடை கொண்ட சிறுவர்களை காட்டிலும் எடை கூடுதளுடனும், உடல் நிறை குறியீட்டு எண் அல்லது BMI z score உடன் காணப்படுகிறார்கள்)
இந்த ஆதாரங்கள் மார்ச் 2016 வரை சீராக உள்ளது.
ஆதாரங்களின் தரம்
ஆய்வின் உறுதித்தன்மை குறைவாக அல்லது மிக குறைவாக உள்ளது, முக்கியமாக ஏனென்றால் ஒரு சில ஆய்வுகள் மாத்திரம் முக்கியமான விளைவுகளை குறிபிட்டுள்ளது, எத்தனை குழந்தைகள் ஆய்வில் சேர்க்கப்பட்டார்கள் அல்லது இளம்பருவத்தினர் மிகச்சிருமையாக இருந்தனர், மற்றும் ஆய்வுகளின் முடிவுகளில் காணப்பட்ட வித்தியாசங்கள். கூடுதாலாக, அநேக குழந்தைகளும் மற்றும் இளம்பருவத்தினரும் ஆய்வு முடிவுபெருவதற்கு முன்னரே ஆய்வுகளிலிருந்து விலகினர்.
மொழிபெயர்ப்பு: தெற்காசிய காக்ரேன் குழு [திருமதி செல்லுவப்பா, ஜாபெஸ் பால்]