பக்கவாதம் வந்தவர்களுக்கு உடனடியாக இரத்த கட்டிகள் வராமல் தடுபதற்கு எந்த வகையான உறைவெதிர்ப்பி மருந்துகள் சிறந்தது ?

திறனாய்வு கேள்வி

இரத்த ஓட்ட தடை காரணமாக சமீபத்தில் காரணமாக நிகழும் பக்கவாதம் வந்தவர்களுக்கு குருதியுறை வராமல் தடுப்பதற்கு எந்தவகையான இரத்த மெலிவூட்டி சிறந்தது என்று கண்டறிவதே இந்த திறனாய்வின் குறிக்கோள்.

பின்புலம்

பக்கவாதம் ஒரு பொதுவான மற்றும் இயலாமையை ஏற்படுத்தும் நோயாகும். அதிகமாக காணப்படும் பொதுவான பக்கவாதங்களுக்கு மூளையில் ஒரு தமனியின் இரத்த ஓட்டத்தை திடீரென குருதியுறை தடுப்பதே காரணமாக உள்ளது இந்த வகை இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது. உறைவெதிர்ப்பி மருந்துகள் (இரத்த மெலிவூட்டி மருந்துகள்) பக்கவாதம் வந்தவர்களுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அவசரசிகிச்சையில் தரப்படும் மருந்து இரத்த நாளத்தை விரைவாக சென்றடையவேண்டும் என்பதால் அவை ஊசிமூலம் அளிக்கப்படுகிைறது. பக்கவாதத்தில் சோதனை செய்யப்பட்ட , ஊசி மூலம் செலுத்த தக்க உறைவெதிர்ப்பி மருந்துகளாக பகுத்தெடுக்கப்படாத (unfractionated) ஹெப்பாரின், மூலக்கூறு எடை குறைவாயுள்ளஹெப்பரின்மற்றும் ஹெப்பரினாய்டுகள் ஹெப்பரின்னைட்ஸ் ஆகியவை உள்ளன. இந்த மருந்துகள் தமனியில் அடைப்பை நீக்கவும், மீண்டும் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும்,ரத்த ஓட்ட தடையினால் ஏற்படும் பக்கவாதத்திற்குப்பின் கால் சிரைகளில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்கவும் உதவலாம. இதனால் உயிர்ச்சேதம் தடுக்கப்படலாம் அல்லது இயலாமை சிக்கல்கள் தடுக்கப்பட்டுநல்ல மீட்சிக்கான வாய்ப்புகள் மேம்படுகின்றன. இருப்பினும், அத்தகைய மருந்துகள் இரத்தக் கசிவு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. இது அவற்றின் எத்தகைய நன்மைகளையும் புறந்தள்ளிவிடக் கூடியது.

தேடல் தேதி

இங்கே கூறப்பட்டுள்ள சான்றுகள் 201 -ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கிடைக்கப் பெற்றவை.

ஆய்வு பண்புகள்

சமீபத்தில் வந்த பக்கவாதநோயாளிகளுக்கு பகுத்தெடுக்கப்படாத(unfractionated ) ஹெப்பாரினோடு (unfractionated heparin UFH) சிகிச்சையுடன் குறைந்த- மூலக்கூறு எடையுள்ள ஹெப்பாரின் (LMWH) அல்லது ஹெப்பரினாய்டுகளை (heparinoids) ஒப்பிடு செய்த சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகலை நாங்கள் ஆராய்ந்தோம்.

முக்கிய முடிவுகள்

நாங்கள் 3137 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட 9 சோதனைகளைக் கண்டோம். ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வுகள் அனைத்தும் மிதமான ஆபத்துக்கூறு (இதன் அர்த்தம்-இந்த முடிவுகள் நம்பகதன்மை ஆபத்துக்கூறு குறைவாக உள்ளது) உள்ளன என்று அறியப்பட்டது இந்த புதுப்பிக்கப்பட்ட திறனாய்வில், புதிய ஆய்வுகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை . பக்கவாதம் வந்த பிறகு நலம் பெறுதல் அல்லாது இயலாமை பற்றிய நம்பகமான தகவல்கள் எந்த ஆராய்ச்சிகளிலும் தெரிவிக்கப்படவில்லை. பகுத்தெடுக்கப்படாத (unfractionated ) ஹெப்பாரின் (unfractionated heparin UFH) சிகிச்சையுடன் ஒப்பிடும்போது சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலத்தில் அனைத்து காரணத்தினாலும் ஏற்படும் மரணத்தில் , குறைந்த- மூலக்கூறு எடையுள்ள ஹெப்பாரின் அல்லது ஹெப்பரினாய்டுகளின் தாக்கம் இருந்தமைக்கு எந்த ஒரு ஆதரமும் இல்லை (ஆதாரங்களின் தரம் குறைவு) இருப்பினும் UFH ஒப்பிடுகையில் LMWH அல்லது ஹெப்பாரின்நொய்ட்ஸ் (heparinoids) சிகிச்சையில் கணிசமாக கால்களில் உண்டாகும் குருதியுறை குறைந்திருந்தது. நுரையீரலில் உள்ள தமனியில் குருதியுறை அடைத்துக்கொள்வது (சுவாசப்பைப் பிறபொருள்தடுக்கை) மற்றும் தலையோடுக்குள் இரத்தப்போக்கு போன்ற முக்கிய நிகழ்வுகளின் எண்ணிக்கை மிக சிறியதாக இருந்ததால் அதன் நன்மைகள் தீங்கை விட குறைவானதாக இருந்தா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனடி உறைவு எதிர்ப்பி சிகிச்சை தேவைப்படும் இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதநோயாளிகளுக்கு நிலையான பகுத்தெடுக்கப்படாத (unfractionated ) ஹெப்பாரினோடு ஒப்பிடுகையில் எந்தவகையான ஹெப்பரின்கள் சிறந்தவை அல்லது எவ்விதத்தில் புதிய ஹெப்பரின்கள் (குறைந்த மூலக் கூறு எடை உள்ள ஹெப்பரின்கள் அல்லது ஹெப்பரினாய்டுகள்) சிறப்பானவை என்பதற்கு திறனாய்வில் சேர்க்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளிலிருந்து ஆதாரங்கள் காண்பிக்கப்பட வில்லை. இந்த நிச்சயமற்ற தன்மையை தீர்ப்பதற்கு மேலும் பெரியளவிலான ஆராய்ச்சிகள் தேவை.

ஆதாரங்களின் தரம்

ஒட்டுமொத்தமாக மிதமான பாரபட்சம் ஆபத்து உள்ள ஆராய்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ள. GRADE அளவுகோலை கொண்டு நாங்கள் இந்த ஆதாரங்ளின் தரத்தை குறைவு என்று மதிப்பிட்டோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர்

Tools
Information