அதிக முன்னமே பிறக்கும் குழந்தைகள் மற்றும் குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பதில் கர்ப்பக் காலத்தின் போது கூடுதலான ஆதரவவை அளிக்கும் திட்டங்கள் திறன் மிக்கவையாக இருக்கவில்லை.
சமூக வசதி குறைவான சூழல்களில் உள்ள தாய்களுக்கு பிறக்கும் குழந்தைகள், சிறிதாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் மற்றும் அதனால் ஆரோக்கிய பிரச்னைகளை கொண்டிருக்கும். வழக்கமான பராமரிப்புடன், உளவியல் ஆதரவு, நடைமுறை உதவி, மற்றும் ஆலோசனை ஆகியவற்றை வழங்கும் திட்டங்கள் கூடுதலாக அளிக்கப்படுகின்றன. கர்ப்பக் காலத்தில் கூடுதலான ஆதரவை பெற்ற பெண்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் ஒரு சிசேரியன் பிறப்பு ஆகியவற்றின் வாய்ப்பு குறைவாக இருந்தது என 12, 264 பெண்களை உள்ளடக்கிய 17 சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. எனினும், வெகு முன்னமே குழந்தை பிறப்பது அல்லது எதிர்பார்த்ததை விட குழந்தை சிறிதாக இருக்கும் வாய்ப்பையும் கூடுதலான ஆதரவு குறைக்கவில்லை.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.