கருவுற்ற காலத்தில் துத்தநாக சத்து(zinc) உட்கொள்வதால் குறைமாத பிறப்புகள் குறைகின்றது. ஆனால் எடை குறைவான குழந்தை பிறப்புகளை தடுக்க முடியவில்லை.
குழந்தை பெறுவதற்கான வயதை எட்டிய பல பெண்கள் மிதமான துத்தநாகம் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர். குறைவான துத்தநாகம் குறைகால பிறப்பு அல்லது நீடித்த பிள்ளைபேற்று வலியை உண்டு பண்ண காரணமாக மாறலாம். இந்த துத்தநாக குறைபாடு பச்சிளங்குழந்தையின் வளர்ச்சியையும் பாதிக்கும். 17,000 பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பங்கு பெற்ற 21 சமவாய்ப்பீடு கட்டுபடுத்தப்பட்ட சோதனைகள் உள்ளடக்கிய திறனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை: பிரசவத்தின் 27 வாரங்களுக்கு முன் துத்தநாகம் சேர்ப்பு உள்ளவர்கள் மற்றும் சேர்ப்பு இல்லாதவர்கள் இடையிலான ஒப்பீட்டில் துத்தநாகம் குறைமாத பிறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க சிறிதளவு உதவுகிறது. ஆனால் எடை குறைந்த பிறப்புகளை தவிர்க்க இயலவில்லை. ஒரு ஆராய்ச்சி இந்த திறனாய்விற்கு தரவு எதுவும் அளிக்கவில்லை. பாதிக்கும் மேலான ஆய்வுகளில் பாரபட்சமான முடிவுகளை உண்டுபண்ணும் அபாயத்தை பற்றிய தெளிவற்ற நிலை உள்ளது. பேறுகால வலிப்புக்கும் பிரசவத்தினால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் தெளிவான வேறுபாடுகள் காணப்படவில்லை. துத்தநாகச் சிகிச்சையையும் போலியான மருத்துவ முறையையும்(Placebo) ஒப்பிடும் முதல் நிலை ஆய்வுகளில் துத்தநாகம் உட்கொண்ட குறைந்த வருமானம் பெறும் பெண்களிடம் நிகழ்த்திய ஆய்வுகளில் குறைமாத பிறப்புகள் 14% குறைகின்றது என அறியமுடிகிறது. அனைத்து பெண்களுக்கும் இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் உயிர்சத்துக்கள்(Vitamins) அள்ளிக்கப்பட்டும் சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் துத்தநாகம் போன்ற பல நுண்ணூட்டச்சத்துக்களை (Micronutrients)) மகப்பேறுக்கு முன் அளிக்கவேண்டும் என்று யுனிசெப்(UNICEF) வலியுறுத்தி வருகின்றது. கருவுற்ற பெண்களுக்கு, முக்கியமாக குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு, துத்தநாகம் மட்டும் அளிப்பதைவிட பெண்ணின் ஒட்டுமொத்த ஊட்டநிலையினை முன்னேற்ற உதவும் வழிமுறைகளை கண்டறிவதே தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முன்னேற்ற உதவும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இரத்தசோகை, தொற்றுநோய், மலேரியா காய்ச்சல் மற்றும் கொக்கி புழுநோய் சோகை முதலியவைகள் அணுகாமல் காப்பதும்S அவசியமாகிறது.
மொழிபெயர்ப்பு: சி.இ. பி.என்.அர் குழு