குறைகாலபிறப்பு குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க புரதம் கொண்டு செறிவூட்டிய தாய்ப்பால் நன்மைப் பயக்கும் என்று கூற போதுமான ஆதாரங்கள் இல்லை. நிறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு (40 வாரங்கள்) தாய்ப்பாலே சிறந்த ஊட்டச்சத்து மூலமாக உள்ளது. ஆனால் குறைகாலபிறப்பு (37 வாரத்துக்கு முன்) குழந்தைகளுக்கு வேறு பல ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. குறைகாலபிறப்பு குழந்தைகளுக்கு குறைகாலத்தில் பிரசவித்த தாயின்பால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். குறைப்பிரசவ குழந்தைகளுக்கு அதிக புரதம் தேவை; மேலும் நிறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை விட மிக விரைவாக புரதத்தை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க தாய்ப்பாலுடன் புரதம் சேர்த்துக் கொடுப்பது குறுகிய-கால எடை அதிகரிப்புக்கு உதவும் என்று இந்த திறனாய்வு கண்டறிந்தது. எனினும், புட்டி பால் மூலம் அதிக அளவு அளிக்கப்படும் புரதம் குழந்தையின் நீண்ட கால குழந்தை வளர்ச்சிக்கு சிக்கல்களை உண்டுபண்ணலாம். அதிக பாதுகாப்பு மற்றும் அதிக செயல் விளைவுகள் அளிக்கும் விதத்திலான புரதம் சேர்க்கையின் அளவினைக் கண்டறிய மென்மேலும் ஆராய்ச்சி தேவையாய் உள்ளது.
மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு