உலகளவில், ஒவ்வொரு நாளும் 80,000 மற்றும் 100,000 வரை இடையேயான இளம்வயது மக்கள் புகைக்க ஆரம்பிக்கின்றனர் மற்றும் நான்கில் ஒரு யுகே மற்றும் அமெரிக்க இளம் வயது மக்கள் புகைக்கின்றனர். அநேக வளர் பருவ புகையிலை திட்டங்கள், வளர் பருவத்தினர் புகைக்க தொடங்குவதை தடுப்பதில் நோக்கம் கொண்டுள்ளன, ஆனால் சில திட்டங்கள், ஏற்கனவே புகைத்து கொண்டிருக்கும் வளர் பருவத்தினருக்கு அதை விடுவதற்கு உதவுவதில் நோக்கம் கொண்டுள்ளன. வளர் பருவத்தினர் புகைப்பதை விடுவதற்கு உதவும் வழிகளை ஆராய்ந்த கலவையான தரத்தை கொண்டிருந்த 28 ஆய்வுகளை (ஏறக்குறைய 6000 பங்கேற்பாளர்கள்) நாங்கள் அடையாளம் கண்டோம். புகைப்பதை விடுவதற்கு இளம் நபரின் ஆயத்தம், நடத்தை மாற்றத்திற்கு ஆதரவளித்தல், மற்றும் செயல் நோக்கத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை கணக்கில் கொள்ளும் பலவித அணுகுமுறைகளை இணைக்கும் திட்டங்கள் உறுதிஅளிப்பவையாக உள்ளன. திறனை முடிவு செய்வதற்கு ஆதாரத்தை அளிக்க சோதனைகள் ம் மற்றும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இருக்க ஆரம்பித்து உள்ளன. வளர் பருவத்தினரில், நிகோட்டின் மாற்று மற்றும் பூப்ரோபியான் போன்ற மருந்துகள் வெற்றி மிக்கவையாக காட்டப்படவில்லை மற்றும் சில பாதகமான நிகழ்வுகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இது வரைக்குமான சோதனைகள் புகைப்பதை விடுவது என்பதற்கு வெவ்வேறான சொற்பொருள் விளக்கங்களை கொண்டுள்ளன மற்றும் முடிவுகளின் பரந்த அளவிலான செயலாக்கத்திற்கு, நாம் நம்பிக்கையாய் இருக்கும் வகையில் அநேக சிறிய சோதனைகள் போதுமான பங்கேற்பாளர்களை கொண்டிருக்கவில்லை. சில அணுகுமுறைகள் கருத்தில் கொள்ளப்படுவதற்கு தகுதி வாய்ந்ததாக இருக்கக் கூடும், ஆனால், பெரியளவு சேவை திட்டங்களின் சாத்தியமான வெற்றி மற்றும் செலவுகளை துல்லியமாக மதிப்பீடு செய்வதற்கு முன் சிறப்பான ஆதாரத்தை வழங்குவதின் தேவை இன்னும் இருக்கிறது.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.