பின்புலம்
பூண்டு ஜலதோசத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பரவலாக நம்பப் படுகிறது. பாராம்பரியமாக பூண்டு உபயோகிப்பதும், பூண்டிற்கு ஆண்டிபயோடிக் மற்றும் ஆண்டிவைரல் குணங்கள் இருப்பதாக சில ஆய்வக சான்றுகள் இருப்பதுமே இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாகும். வயதுவந்தவர்கள் சராசரியாக ஆண்டிற்கு இரண்டு முதல் நான்கு முறை ஜலதோஷத்தால் பாதிக்கப்படுகிறார்கள்
ஆய்வு பண்புகள்
ஆகஸ்ட் 7, 2014 தேதியளவிலான ஆய்வுகள் ஆதாரங்களாக எடுத்து கொள்ளப்பட்டன. எடுத்துக் கொண்ட ஆய்வில் 8 ஆய்வுகள் கண்டறியப்பட்டு, அதில் ஒரே ஒரு ஆய்வுமட்டும் திறனாய்வின் அளவுகோலை பூர்த்தி செய்வதாக இருந்தது. இந்த ஆய்வு 146 பங்கேற்பாளர்களை மூன்று மாத காலம் மதிப்பீடு செய்தது. பாதி பங்கேற்பாளர்கள் மருத்துவபோலி மாத்திரைகளும் மற்றும் மறுபாதி பங்கேற்பாளர்கள் பூண்டு மாத்திரையும் ஆய்வு காலத்தின் பொழுது உட்கொண்டனர். ஜலதோசத்திற்கான அறிகுறிகள் ஏற்பட்டபொழுது அவற்றை பங்கேற்பாளர்கள் நாட்குறிப்பில் எழுதி வைத்தனர்.
முக்கிய முடிவுகள்
பூண்டு மாத்திரையை மூன்று மாதங்கள் தினமும் உட்கொண்டவர்கள் ( மருந்துப்போலி மாத்திரைக்கு பதிலாக) குறைவான ஜலதோஷ பாதிப்புக்குள்ளாகினர். மூன்று மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஒப்பிடும்பொழுது, பூண்டு மாத்திரை உட்கொண்டவர்கள் குழுவில்உள்ளவர்கள் 24 ஜலதோச நிகழ்வுகளும், மருத்துவபோலி உட்கொண்ட குழுவில் உள்ளவர்கள் 65 நிகழ்வுகளும் இருந்து. பங்கேற்பாளர்கள் ஜலதோசத்தால் பாதிக்கப்பட்ட பொழுது நோயின் காலஅளவு இரண்டு குழுவிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது (4.63 எதிர் 5.63 நாட்கள் ).
சான்றுகளின் தரம்
ஆய்வில் பங்கேற்றவர்களில் பூண்டு உட்கொண்ட குழுவில் இருந்தவர்களில் நான்கு பேரும், மருத்துவ போலி குழுவில்இருந்தவர்களில் ஒருவரும் ஏப்பம் விடும் போது பூண்டு வாசனை வந்தாக கூறினார்கள், இதனால் பங்கேற்பாளர்களை பூண்டு மாத்திரை என தெரியாமல் உண்ண வைப்பதின் சாத்தியம் மிகக் குறைவே. இருப்பினும் மற்ற பாரபட்சங்கள் ஆய்வில் வெகுவாக கட்டுபடுத்தபட்டுள்ளது. இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்ட ஆய்வு, திறனாய்வில் கேள்விக்கு நேரிடையாக பதில் கூறும் வகையில் இருந்தது. ஆய்வு சிறியதாக இருந்த போதிலும், போதுமான பங்கேற்பாளர்களை கொண்டிருந்ததால் துல்லியமான, நம்பகமான முடிவுகளை வழங்க போதுமானது. ஆய்வுகளில் முடிவுகள் ஏதும் தேர்ந்தெடுத்து அறிக்கையிடப்பட்டன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனினும் இவற்றின் விளைவுகளை முன்னதாகவே முடிவு செய்ததாக தோன்றவில்லையாதலால் இதற்கும் சாத்தியம் உள்ளது. நேர்மறையான முடிவுகளை தரும் ஆய்வுகளை உருவாக்க மருந்து நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ள ஊக்கநிதியை நோக்குகையில் பூண்டினால் எந்த விளைவுகளும் ஏற்படவில்லை எனக் கண்டறிந்த எந்த ஆய்வுகளும் இது வரை பிரசுரிக்கப்படாமலே இருப்பதற்கு சாத்தியகூறுகள் உள்ளன. மொத்தத்தில் சான்றுகளின் தரம் மிதமானதேயாகும்.
பக்க விளைவுகள்
இந்த சிறிய ஆய்வில் சாத்தியமான பக்க விளைவுகளாக வாடை மற்றும் தோல் வெடிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டினால்ஏற்படுவதற்கு சாத்தியமான பக்கவிளைவுகள் பற்றிய அதிக தகவல்கள் தேவைப்படுகிறது.
மொழிபெயர்ப்பு: தி. செந்தில்குமார் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு