புகைத்தல் மாரடைப்புக்கு ஒரு காரணியாக இருக்கிறது மற்றும் ஒரு மாரடைப்பிற்கு பின் , புகைத்தலை நிறுத்துவதற்கு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆலோசனை வழங்கல் போன்ற உளசமூகவியல் சார்ந்த புகைபிடித்தலை நிறுத்தும் சிகிச்சை தலையீடுகள், இது போன்ற நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு மேல் அளிக்கப்பட்டால், அவர்கள் புகைப்பதை நிறுத்த உதவ முடியும் உளசமூகவியல் சிகிச்சை தலையீடுகள், இது போன்ற நோயாளிகள் 6 மாதங்களுக்குள் புகைப்பதிலிருந்து வெளியேற உதவ முடியும். ஆனால் நீண்ட கால விளைவுகள் பற்றிய ஆய்வுகளின் நன்மைகள் குறுகிய-கால கண்டுபிடிப்புகளை ஆதரிக்கவில்லை. பெரும்பாலான சோதனைகள் பல்வேறு சிகிச்சை தலையீடு முறைகளை கலந்து பயன்படுத்தின, எனவே எந்த ஒரு தனி உபயமும் உயர்ந்த பலாபலன் காட்டவில்லை.
மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.