பின்புலம்
மல்டிபல் ஸ்கேலோரிஸ் (எம்எஸ்), உலகளவில் 1.3 மில்லியன் மக்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட வியாதியாகும். எம்எஸ், மத்திய நரம்பு மண்டலத்தில் பரவலான பாதிப்பை ஏற்படுத்தி, பரந்த அளவிலான வெவ்வேறான உடல் மற்றும் அறிவுத் திறன் (உள செய்கைகள்) அறிகுறிகளுக்கு வழி வகுக்கும். எமஎஸ்-சின் மிக முதன்மையான மற்றும் இயலாமை அறிகுறிகளில் அயர்ச்சியும் ஒன்றாகும். எம்எஸ் கொண்ட மக்களில், அயர்ச்சியை குறைப்பதற்கு தற்போது எந்த திறன் வாய்ந்த மருந்தும் இல்லை. உடல் செயல்பாட்டை மாற்றுவதன் மூலம் நேரடியாகவோ, எடுத்துக்காட்டிற்கு ஹார்மோன் செயல்பாடு, அல்லது மேம்பட்ட உடல் இயக்கம் மற்றும் பொதுவான உடல் நலம் மூலம் மறைமுகமாகவோ, அயர்ச்சியை குறைப்பதற்கு, உடற்பயிற்சி சிகிச்சை ஒரு வழியாக இருக்கக் கூடும்.
ஆய்வு பண்புகள்
எம்எஸ் கொண்ட பெரியவர்களில், உடற்பயிற்சியை உடற்பயிற்சியின்மையோடு அல்லது பிற சிகிச்சைகளை ஒப்பிட்ட மருத்துவ சோதனைகளுக்காக நாங்கள் அறிவியல் தரவுத்தளங்களை தேடினோம். அக்டோபர் 2014 வரை இந்த ஆதாரம் தற்போதையது.
முக்கிய முடிவுகள்
சுய-அறிக்கையிடப்பட்ட அயர்ச்சியை பயன்படுத்தி, உடற்பயிற்சியின் திறனை மதிப்பிட்ட 2250 எம்எஸ் கொண்ட மக்கள் கொண்ட 45 சோதனைகளை நாங்கள் கண்டோம். எம்எஸ் கொண்ட 1603 மக்கள் உள்ளடக்கிய 36 ஆய்வுகளை நாங்கள் ஒரு பகுப்பாய்வில் பயன்படுத்தினோம். உடற்பயிற்சி சிகிச்சை, எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் அயர்ச்சியை குறைப்பதற்கு ஒரு உறுதியளிக்கிற சிகிச்சையாக இருக்கும் என்ற கருத்தை, இந்த 36 சோதனைகளும் கூட்டாக ஆதரிக்கின்றன. இந்த கண்டுப்பிடிப்பு, மிக சிறப்பாக நீடித்து உழைக்கும் திறன், கலவை பயிற்சி ( அதாவது, தசை ஆற்றல் பயிற்றுவிப்பு மற்றும் நீடித்து உழைக்கும் திறன் பயிற்றுவிப்பின் கலவை ) அல்லது பிற பயிற்றுவிப்பு (எடுத்துக்காட்டு. யோகா, டாய்சேய்) ஆகியவற்றிற்கு பொருந்தும். உடற்பயிற்சி சிகிச்சையின் பாதுகாப்பை மதிப்பிட, உடற்பயிற்சி சிகிச்சை பெற்ற மக்களில் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை-அல்லாத குழுவில் இருந்த மக்களில் எம்எஸ் மறுவீழ்வுகளின் எண்ணிகையை நாங்கள் கணக்கிட்டு, எந்த ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தையும் காணவில்லை.
சான்றின் தரம்
இந்த கண்டுப்பிடிப்புகள் உறுதியளிப்பவையாக இருந்தாலும், சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட சில செயல் முறைகள் கண்டுப்பிடிப்புகளின் நம்பகத் தன்மையை பாதித்திருக்க கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பெரும்பாலான சோதனைகள் மிக குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை சேர்த்திருந்தது, அயர்ச்சியை இரண்டாம் பட்ச விளைவாக மதிப்பிட்டதுடன் மற்றும் அயர்ச்சியை குறைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை (ஆனால், ஒரு சான்றுக்கு, நடை திறனை மேம்படுத்துவதற்கு நோக்கம் கொண்டிருந்தது). அதே போல், மிக கடுமையாக அயர்ச்சியை கொண்ட எம்எஸ் மக்களிடையே உடற்பயிற்சி சிகிச்சை குறைவான சாத்தியமாகக் கூடும். கூடுதலாக, எம்எஸ்-சின் மறுவீழ்வுகள் பற்றிய அறிக்கையிடல் மற்றும் பொருள் விளக்கம் நிலையாக இல்லாமல், பொதுவாக மோசமானதாக இருந்தன. உடற்பயிற்சி சிகிச்சையின் சாத்தியக்கூறு, திறன்கள், மற்றும் இயங்குமுறைகள் ஆகியவற்றை தீர்மானிக்க எதிர்கால உயர்-தர ஆராய்ச்சி தேவைப்படுகிறது. அயர்ச்சிக்கான ஒரு நிலையான பொருள் விளக்கம் மூலம் எதிர்கால ஆய்வுகள் பயன்பெறும், மற்றும் குறிப்பாக அயர்ச்சியை மதிப்பிட, தொடர்ச்சியாக வடிவமைக்கப்படும்.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.