பின்னணி
இடுப்பு எலும்பு முறிவு, பொதுவாக கீழே விழுவதினால் முதியவர்களுக்கு முதன்மையாக ஏற்படும் காயம் ஆகும். இது ஒரு நபரது , நடப்பது, தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை செய்வது மற்றும் பிறர் ஆதரவின்றி செயல்படுவது ஆகியவற்றின் திறனை பாதிக்கும். இடுப்பு எலும்பு முறிவு, முதுமை மறதி நோய் கொண்ட மக்களில் அதிகமாக காணப்படுகிறது மற்றும் அதிலிருந்து அவர்கள் மீளுவது அவர்களுக்கு கடினமாக தெரியும். இது ஏனென்றால், அவர்களின் அறுவை சிகிச்சைக்கு பின், அதிகமாக குழம்பி மற்றும் கூடுதல் பக்க விளைவுகளான அழுத்த புண்கள் மற்றும் மார்பு பகுதி தொற்றுகள் வருவதற்கான அதிக அபாயம் அவர்களுக்கு உள்ளது. மேலும், தங்களின் வலி மற்றும் அசௌகரியத்தை வெளிப்படுத்துவது அதிக சிரமமாக அவர்களுக்கு தெரியும்.
திறனாய்வு கேள்வி
முதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவை தொடர்ந்து பல விதங்களில் சிகிச்சை அளிப்பது, அவர்கள் எவ்வாறு நன்றாக மீளுவர் மற்றும் மீட்சியுடன் தொடர்புடைய செலவுகள் மேல் எவ்விதம் பாதிக்க கூடும் என்பதை அறிய நாங்கள் விரும்பினோம்.
ஆய்வு பண்புகள்
முதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவை தொடர்ந்து, ஒரு சோதனை அமைப்பில், எதாவது ஒரு மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வை வழக்கமான பராமரிப்போடு ஒப்பிட்ட சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை நாங்கள் தேடினோம். கடைசி தேடல் 9 ஜூன் 2014-ல் நிகழ்த்தப்பட்டது.
இடுப்பு எலும்பு முறிவை தொடர்ந்து, 316 ஞாபக மறதி நோய் கொண்ட மக்களை ஆய்வு செய்த ஐந்து சோதனைகளை நாங்கள் கண்டறிந்தோம். நான்கு சோதனைகள், அனைத்து வெவ்வேறு ஆரோக்கிய வல்லுனர்கள், மருத்துவமனை மற்றும் சமூக அமைப்புகளில் அல்லது வெறும் மருத்துவமனையில் கூட்டாக வேலை செய்த மேம்பட்ட பலதுறை புனர்வாழ்வு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை, வழக்கமான மருத்துவமனை பரமரிப்போடு ஒப்பிட்டன. ஒரு சோதனை, ஒரு முதுநோய் மருத்துவர் தலைமையேற்று நடத்திய மருத்துவமனை பராமரிப்போடு ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தலைமையேற்று நடத்திய பராமரிப்போடு ஒப்பிட்டது.
முக்கிய கண்டுபிடிப்புகள்
மருத்துவமனையின் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வு சில பக்க விளைவுகளின் வீதத்தை குறைத்தது என்பதற்கு குறைந்த-தர ஆதாரம் உள்ளது, மற்றும் மருத்துவமனை மற்றும் வீட்டு அமைப்புகளின் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மூன்று மாதங்களில் ஒரு மருத்துவமனை, புனர்வாழ்வு நிலையம் அல்லது பராமரிப்பு இல்லத்தில் தங்குவதன் வாய்ப்பைக் குறைத்தது. 12 மாதங்களில், இந்த வித்தியாசம் நிச்சயமற்றதாக இருந்தது. ஆதாரத்தின் தரம் மிக குறைவாக இருந்ததால், மருத்துவமனை மற்றும் வீட்டில், செயல்பாடு விளைவுகளின் மீதான மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வின் தாக்கம் மிகவும் நிச்சயமற்றதாக இருந்தது. சித்தப்பிரமை மீது, ஒரு முதுநோய் மருத்துவர் தலைமையேற்று நடத்திய மருத்துவமனை பராமரிப்பை ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் தலைமையேற்று நடத்திய பராமரிப்போடு ஒப்பிடும் போது, குறைந்த-தர ஆதாரத்தின் அடிப்படையில், அதன் விளைவு மிக நிச்சயமற்றதாக இருந்தது.
சான்றின் தரம்
ஆய்வுகள் சிறிதாகவும் மற்றும் உயர் ஒரு தலை சார்பு அபாயத்தை கொண்டவையாகவும் இருந்தன, ஆதலால் பின்வரும் கண்டுப்பிடிப்புகளை கவனமாக பொருள் விளக்கம் கொள்ள வேண்டும். முதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட எந்த ஒரு பராமரிப்பு மாதிரிகளுக்கும் வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சியே இருந்தது. எந்த ஆய்வுகளும் , ஆய்வு மக்களில் முதுமை மறதி நோய் அல்லது வாழ்க்கைத் தரத்தின் மேல் பராமரிப்பின் விளைவை காணவில்லை. எல்லா ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க தர வரம்புகளை கொண்டிருந்தன.
முடிவுரை
முதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்த பராமரிப்பின் சிறந்த வழிகளை வகுக்க தற்போதைய ஆராய்ச்சி போதுமானதாக இல்லை என்று நாங்கள் முடிவு செய்தோம். எனினும், அனேகமாக எல்லா விளைவுகளுக்கும், ஆய்வுகள் மிகவும் சிறிதாக மற்றும் மிக குறைந்த தரத்தை கொண்டிருந்ததால், கண்டுப்பிடிப்புகள் நிச்சயமற்றதாக இருந்தன. முதுமை மறதி நோய் கொண்ட மக்களுக்கு ஒரு இடுப்பு எலும்பு முறிவைத் தொடர்ந்த பராமரிப்பை முன்னேற்றுவதற்கான சிறந்த உத்திகளை தீர்மானிக்க அதிகப்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
பிரகடனங்கள்
இந்த திறனாய்வு, ஒரு NIHR திட்டத்தினுடைய நிதி ஆதாரத்தின் பாகமாக இருக்கும் (குறிப்பு எண்: டிடிசி-ஆர்பி- பிஜி 0311-10004; தலைமை விசாரணையாளர்: ஃபாக்ஸ்). இந்த பணி தொடர்பாக, எந்த ஆசிரியர்களும் முரண்பாடுடைய ஈடுபாடு இல்லை என்று பிரகடனப்படுதுகின்றனர்.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.