சிறுநீர் பாதை தொற்றுக்களை தவிர்ப்பதற்கு கிரான்பெர்ரிகள் (கிரான்பெர்ரி சாறாக) பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீர் பையின் சுவர்களில் பாக்டீரியாவை ஒட்டாமல் தடுக்கக் கூடிய ஒரு வஸ்தை கிரான்பெர்ரிகள் கொண்டுள்ளன. இது, சிறுநீர் பை மற்றும் பிற தொற்றுக்களை தடுக்கக் கூடும். கிரான்பெர்ரி தயாரிப்புகளை ஒரு கட்டுப்பாடு அல்லது மாற்று சிகிச்சைகளோடு ஒப்பிட்ட 24 ஆய்வுகளை (4473 பங்கேற்பாளர்கள்) இந்த திறனாய்வு அடையாளம் கண்டது. கட்டுப்பாடு அல்லது மாற்று சிகிச்சையோடு ஒப்பிடும் போது, கிரான்பெர்ரி தயாரிப்பை உட்கொண்ட மக்களில் குறைவான தொற்றுக்களை நோக்கிய போக்கு இருந்தது, ஆனால் இது ஒரு குறிப்பிடத் தகுந்த கண்டுபிடிப்பாக இல்லை. ஒரு ஏற்கத்தகுந்த சிகிச்சை தலையீடாக இல்லாதபடிக்கு, இந்த ஆய்வுகளில், அநேக மக்கள் கிரான்பெர்ரி சாறு பருகுவதை நிறுத்தி விட்டனர். சிறுநீர் பாதை தொற்றுக்களை தவிர்ப்பதில் கிரான்பெர்ரி சாறு ஒரு குறிப்பிடத்தகுந்த நன்மையை கொண்டிருப்பதாக தெரியவில்லை மற்றும் நீண்ட-காலத்திற்கு அதை உட்கொள்ளுவதற்கு ஏற்புடையதாக இருக்காது. ஒரு செயலாற்றல் உள்ள உட்பொருள் இல்லாத பட்சத்தினால், கிரான்பெர்ரி தயாரிப்புகள் (மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல் போன்ற) திறன்மிக்கதாக இருக்கவில்லை (ஆன்டிபையாட்டிஸ் எடுத்துக்கொள்வதை போன்ற விளைவை கொண்டிருந்தாலும்).
மொழிப்பெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்