முழங்கால் சில்லு அல்லது முழங்கால் தொப்பி என்பது முழங்கால் முன் அமைந்துள்ள ஒரு வில்லை வடிவ எலும்பு ஆகும். இது, தொடையில் உள்ள க்வாட்ரிசெப்ஸ் தசைகளின் நாணோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் தொடையெலும்பின் கீழ் இறுதியில் ஒரு பள்ளத்தினிடையே நகரும் தன்மை உடையது. இந்த பள்ளத்தை விட்டு முழங்கால் சில்லு முற்றிலும் வெளியே நகரும் போது, முழங்கால் சில்லு இடப்பெயர்வு ஏற்படுகிறது. இது, பொதுவாக இளம் பருவத்தினர் மற்றும் உடல் சுறுசுறுப்பான மக்களில், பெரும்பாலும் விளையாட்டு நடவடிக்கைகளின் போது ஏற்படுகிறது.
முழங்கால் சில்லு இடம்பெயரும் போது, முழங்கால் மூட்டை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் ஒரு குறித்த காலம் மறுவாழ்வு சிகிச்சை தேவைப்படுகிற அளவு காயம் ஏற்படுகிறது. இது, இயக்கதடுப்பு மற்றும் முழங்கால் இயக்கத்தை கட்டுப்படுத்தும் காப்புகள், பயிற்சிகள், கையாளல் சிகிச்சை முறை, பசைப்பட்டைகள் மற்றும் மின்சிகிச்சை முறைகள் போன்ற சிகிச்சைகளை உள்ளடக்கும். மென்மையான திசுக்களை பழுது பார்க்கும் அல்லது மீண்டும் கட்டமைக்கும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் அல்லது முழங்கால் தொப்பி மீண்டும் இடம் பெயர்வதை தடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்வது ஆகியவை மக்களுக்கு ஒரு நல்ல விளைவை கொடுக்கலாம் என்று சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.
இந்த காக்குரேன் திறனாய்வு, தொடர்ச்சியாக முழங்கால் தொப்பி இடப்பெயர்வு கொண்ட மக்களில் அறுவை சிகிச்சையல்லாத தனி சிகிச்சையுடன் அறுவை சிகிச்சையை ஒப்பிட்டு அதன் முடிவுகளை கண்ட ஐந்து ஆய்வுகளை (339 பங்கேற்பாளர்கள்) சேர்த்துள்ளது. அனைத்து பரிசோதனைகளின் பங்கேற்பாளர்களும் ஒரு முதன்மையான (முதல்-தடவை) இடப்பெயர்வுக்கு சிகிச்சையளிக்கப்பட்டவர்கள். இந்த ஆய்வுகள் சிறியவையாகவும் மற்றும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் நடத்துதல் ஆகியவற்றில் சில பலவீனங்களைக் கொண்டவையாகவும் இருந்தன.
அனைத்து ஐந்து ஆய்வுகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தரவின் அடிப்படையில், மீண்டும் இடப்பெயர்வு ஏற்படும் ஆபத்து அல்லது ஒரு நிலைசார்ந்த முழங்கால் விளைவு நடவடிக்கை மதிப்பெண்களில், அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையல்லாத மேலாண்மை இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படவில்லை என இந்த திறனாய்வு கண்டது. மூன்று ஆய்வுகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தரவு, அடுத்தடுத்த அறுவை சிகிச்சைக்கான தேவைகளில் சிகிச்சை குழுக்களிடையே எந்த வித்தியாசமும் இல்லை எனச் சுட்டிக்காட்டியது. சிக்கல்களை கூறிய ஒரே ஒரு ஆய்வு மட்டும், அனைத்து நான்கு சிகிச்சை சிக்கல்களும் அறுவை சிகிச்சை மேலாண்மை குழுவில் ஏற்பட்டது என்று அறிவித்தது.
தொடர்ச்சியாக முழங்கால் சில்லு இடப்பெயர்வு கொண்ட மக்களில், அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையல்லாத ஆரம்ப மேலாண்மையின் விளைவுகளிடையே ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டை உறுதி செய்ய போதிய ஆதாரம் இல்லை என்று இந்த திறனாய்வு முடிவு செய்தது. கூடுதலான ஆராய்ச்சி பரிந்துரைக்கப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.