திறனாய்வு கேள்விவழக்கமான அலுவலகம்-சார்ந்த கலந்தாலோசித்தல் அல்லாமல் இணையம்-சார்ந்த அணுகுமுறையை பயன்படுத்தும் தொலை புனர்வாழ்வின் மூலம் பார்வைக்குறைவு கொண்ட மக்களுக்கு அளிக்கப்படும் தொலைத்தூர பார்வை புனர்வாழ்வு சேவைகளின் பயன்களை மதிப்பிடுவதை இந்த முறைப்படுத்தப்பட்ட திறனாய்வு நோக்கமாக கொண்டுள்ளது. பார்வை-சார்ந்த வாழ்க்கைத் தரம் மிகவும் விரும்பத்தக்க விளைவாக இருந்தது, ஆனால், வாசிக்கும் வேகம்,திட்டமிடப்பட்ட அமர்வுகளில் நோயாளியின் இணக்கம், மற்றும் நோயாளி திருப்தி போன்ற பார்வை செயல்பாட்டு அளவுகளிலும் நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம்.
பின்புலம்பார்வைக்குறைவு என்பது, கண்ணாடிகளாலோ, விழி வில்லைகளாலோ அல்லது பிற மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளாலோ சீரமைக்க முடியாத பார்வைத் திறனின் குறைபாடாகும். பார்வைக் குறைவு கொண்ட மக்கள், வாசிப்பது மற்றும் வண்டி ஓட்டுவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை செய்வதை சிரமமாக கருதுவர். உலகம் முழுவதும் தற்போது, சுமார் 314 மில்லியன் மக்கள் பார்வைக் குறைவைக் கொண்டிருக்கின்றனர்.
உருப்பெருக்க கருவிகள் மற்றும் நுட்பங்கள் மூலம் அவர்களின் மீதமுள்ள பார்வை திறனை பயன்படுத்த கற்று தருதல் மூலம் பார்வைக் குறைவு கொண்ட மக்களுக்கு உதவுவதில் 'புனர்வாழ்வு' ஒரு வழியாகும்; அவர்களின் திறன்களை வலுப்படுத்த குறிப்பிட்ட கால அளவுகளிலும் அவர்கள் மதிப்பிடப்படுவர். பார்வைக் குறைவிற்கான அலுவலகம்-சார்ந்த புனர்வாழ்வு திறன் மிக்கது என்று காட்டப்பட்டுள்ளது; எனினும், போக்குவரத்து தடைகள், பயிற்சியுடனான இணக்கத்தை குறைக்கும், மற்றும் திட்டத்தின் ஒட்டுமொத்த திறனையும் கீழிறக்க கூடும்.
இணையம் மூலம் பார்வைக் குறைவு புனர்வாழ்வை வழங்குவது சாத்தியமே (அதாவது, தொலை புனர்வாழ்வு) அலுவலக சந்திப்புகளை ஒப்பிடும் போது, தொலை புனர்வாழ்வு, போக்குவரத்து தொடர்பான சவால்களை தவிர்க்கும், மற்றும் வீட்டிலேயே புனர்வாழ்வு அமர்வுகளின் சவுகரியத்தையும் மற்றும் யதார்த்தத்தையும் அளிக்கும்.
முக்கிய முடிவுகள்திறனாய்வு கேள்வியை நேரடியாக கருத்தில் கொண்ட எந்த தகுதியான ஆய்வையும் இந்த திறனாய்வின் ஆசிரியர்கள் காணவில்லை. இந்த தேடல் 15 ஜூன் 2015 வரை தற்போதையது.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.