பின்புலம்: ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸூடன் வாழும் மக்களில் புகையிலை பயன்பாடு மிக பொதுவான ஒன்றாகும்; இது, ஒரு எல்லைக்குட்பட்ட ஆரோக்கிய பிரச்னைகளை உருவாக்கும் மற்றும் அநேக மரணங்களுக்கு பங்களிக்கும். பொது மக்களில், புகையிலை பயன்பாட்டை நிறுத்த உதவுவதற்கான சிகிச்சை தலையீடுகள் பற்றி சிறந்த ஆதாரம் உள்ளது, எனினும், ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸூடன் வாழும் மக்களில் அவற்றின் திறன் பற்றி தெரியவில்லை.
முறைகள்:ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸூடன் வாழும் மக்களில் புகையிலை பயன்பாட்டை நிறுத்த உதவுவதற்கு, சோதனைகளிலிருந்து கிடைக்கப் பெற்ற ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம். ஆதாரம் ஜூன் 2015 வரை நிலவரப்படியானது. மக்கள், நீண்டக்-காலத்திற்கு (ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலும்) மற்றும் குறுகிய-காலத்திற்கு (ஆறு மாதங்களுக்கு குறைவாக அளவிடப்பட்டது) புகையிலை பயன்பாட்டை விடுவதில் வெற்றி பெற்றனரா என்பதை அறிய நாங்கள் பகுப்பாய்வுகளை நடத்தினோம்.
முடிவுகள்:2000 பங்கேற்பாளர்களுக்கும் மேலானவர்களை உள்ளடக்கிய 14 தொடர்புடைய ஆய்வுகளை நாங்கள் கண்டோம். ஒன்றை தவிர, அனைத்து ஆய்வுகளும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் நடத்தப்பட்டவை. அனைத்து ஆய்வுகளும், மருந்துடன் இணைந்த ஒரு புலனுணர்வு நடத்தை சிகிச்சை தலையீட்டை ஒரு கட்டுப்பாட்டு குழுவோடு ஒப்பிட்டன. முக-முகமான அமர்வு, தொலைப்பேசிகள், கணினிகள், மற்றும் குறுந் தகவல்கள் போன்ற ஒரு பரந்த அளவிலான செயல்முறைகளைக் கொண்டு புலனுணர்வு நடத்தை சிகிச்சை தலையீடு வழங்கப்பட்டன. நிக்கோட்டின் மாற்று சிகிச்சை அல்லது வரினிகிலைன் (புகையிலை பயனர்கள் விடுவதற்கு உதவும் மருந்துகள்) ஆகியவையும் அளிக்கப்பட்டன. கட்டுப்பாட்டு பங்கேற்பாளர்கள், குறைந்த தீவிர, குறுகிய புலனுணர்வு சிகிச்சை தலையீடு மற்றும் சிகிச்சை குழுவை போன்றே அதே மருந்தை பெற்றன. மிதமான ஆதார தரம் கொண்ட ஆறு ஆய்வுகள், நீண்டக்-கால தவிர்ப்பை சோதித்தன; அவை, மிக தீவிர சிகிச்சை தலையீட்டின் நன்மையை பற்றி தெளிவான ஆதாரத்தை காட்டவில்லை. மிக குறைந்த ஆதார தரம் கொண்ட பதினொரு ஆய்வுகள், குறுகிய-கால தவிர்ப்பை சோதித்தன. மருந்து மற்றும் புலனுணர்வு ஆதரவு ஆகியவற்றை இணைத்த ஒருஅதி தீவிர சிகிச்சை தலையீடு, குறுகிய-காலக் கட்டத்திற்கு மக்கள் புகையிலையை விடுவதற்கு உதவக் கூடும் என்று ஆதாரம் பரிந்துரைக்கிறது.
ஆதாரத்தின் தரம்: நீண்டக்-கால தவிர்ப்பின் விளைவிற்கு ஆதாரத்தின் தரம் மிதமானதாக இருந்தது எனவும், குறுகிய-கால தவிர்ப்பின் விளைவிற்கு ஆதாரத்தின் தரம் மிக குறைந்ததாக இருந்தது என்று மதிப்பிடப்பட்டது, ஆதலால், நமது கண்டுபிடிப்புகளின் மேல் நமக்குள்ள நம்பிக்கையை அதிகரிக்க மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்