புகைப்பிடிப்பதை விடும் போது, பெரும்பாலான மக்கள் எடை கூடுவர். அநேக புகைப்பிடிப்பாளர்கள் இதை குறித்து அக்கறைக் கொண்டிருப்பர் மற்றும் இது, அவர்களின் புகைப்பிடித்தலை விடும் முயற்சியை கை விட தோன்றும் என்றும் கூறுவர். உடல் எடை அதிகரிப்பு, ஒரு முந்தைய வெற்றிக்கரமான விடுதல் முயற்சிக்கு பின் மீண்டும் புகைக்க தொடங்குவதற்கு வழி வகுக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. இன்னொரு பக்கம், உடல் எடை அதிகரிப்பை குறைக்க முயற்சிப்பது, புகைப்பிடித்தலை கை விடும் வாய்ப்பையும் குறைக்கக் கூடும் என்று நம்புவதற்கு சிறந்த காரணங்கள் உள்ளன. புகைப்பிடித்தலை விட்ட பின்னர் அதிகரிக்கும் உடல் எடையை குறைப்பதில் அநேக மருந்து மற்றும் நடத்தை திட்டங்கள் சோதிக்கப்பட்டுள்ளன. மருந்து சிகிச்சைகளில், நல்திரெக்ஸ்ஆன் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருந்தது,ஆனால் மருந்து சிகிச்சை நிறுத்தப்பட்ட பின்னர், உடல் எடை மீது அதின் விளைவுகளை பற்றிய எந்த தரவும் இல்லை , மற்றும் நீண்ட-கால புகைப்பிடித்தலை விட்ட பின் அதன் விளைவுகளை தீர்ப்பு செய்ய போதுமான ஆதாரம் இல்லை. எடை மேலாண்மை விளக்கக் கல்வி மட்டும் உடல் எடை அதிகரிப்பை குறைக்கவில்லை மற்றும் ப புகைப்பிடித்தலை விடுவதை வலுவற்றதாக்கும். எடை மேலாண்மை விளக்கக் கல்வியுடன் தனிப்பட்ட குறிகோள்கள் மீது பின்னூட்டம் மற்றும் ஒரு தனிப்பட்ட ஆற்றல் பரிந்துரை என்ற தனிப்பட்ட ஆதரவு அளிப்பது உடல் எடைஅதிகரிப்பை குறைக்கும் மற்றும் இது புகைப்பிடித்தலை வலுவற்றதாக்கியது என்பதற்குஆதாரம் இல்லை. இடைமறிக்கப்பட்ட விஎல்சிடி பயன்பாடு, நீண்ட-காலத்திற்கு அல்லாமல், குறுகிய-காலக் கட்டத்திற்கு, புகைப்பிடித்தலை விடுவதின் வெற்றியை மற்றும் உடல் எடை அதிகரிப்பை மேம்படுத்தும்.
சில புகைப்பிடித்தலை விடும் சிகிச்சை தலையீடுகள் உடல் எடை அதிகரிப்பதை குறைக்கவும் கூடும். புப்ரோபியன், ப்லக்ஷொடின், ஏன்ஆர்டி, மற்றும் வரேன்கலின் ஆகியவை சிகிச்சையின் போது எடை அதிகரிப்பை குறைதான, எனினும் எடை குறைப்பின் மீதான விளைவு, சிகிச்சை நிறுத்தப்பட்ட பின்னர் மிகவும் சிறிதாக இருந்தது மற்றும் இந்த விளைவுகள் நீண்ட-காலத்திற்கு நிலைத்திருந்தன என்பதற்கு போதுமற்ற ஆதராம் இல்லை. புகைப்பிடித்தலை விட்ட பின்னான உடல் எடை அதிகரிப்பை, உடற்பயிற்சி குறைத்தது என்று சில ஆதாரம் பரிந்துரைக்கிறது, ஆனால் இது ஒரு வாய்ப்பு முடிவாக இருந்திருக்குமா என்பதை தெளிவாக அதிகப்படியான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. புகைப்பிடித்தலை விட்ட பின் தொடர்ந்த சராசரி உடல் எடை அதிகரிப்பின் சம்மந்தப்பட்ட சிகிச்சை தலையீடுகளின் விளைவுகள் மிதமாக இருந்தன.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.