மணிக்கட்டு குகை வழியாக செல்லும் இரண்டு பிரதான நரம்புகளுள் ஒன்று அழுத்தப்படுவதால், கை,மணிக்கட்டு, சிலநேரங்களில் முன்கை, கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகியவற்றில் கூச்ச உணர்வு, உணர்வின்மை மற்றும் வலி போன்றவை ஏற்படும் பொதுவான நிலை மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு (Carpal tunnel syndrome) ஆகும். பொதுவாக பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு அதிக அளவில் CTS பாதிப்பு உண்டாகலாம். பலர் இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள், இருப்பினும் சிலவேளைகளில் சிம்பு (splinting) அணிவது போன்ற அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சைமுறைகள் அளிகப்படுகிறது. சிம்பு அணிவது என்பது ஒரு சாதனத்தை கொண்டுமணிக்கட்டு நகர்த்த முடியாவண்ணம் (immobilisation) பொருத்துவது. இதில் பொதுவாக விரல்கள் மற்றும் கட்டை விரல் அசையும் வண்ணம் பொருத்தப் படும். ஒட்டுமொத்தமாக சிம்பு அணிவதின் பயன் மற்றும் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்த அராய்ச்சிகளை நங்கள் தேடி, 1190 பங்கேற்பாளர்கள் கொண்ட 19 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனை அல்லது போல்வு சமவாய்ப்பிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை கண்டோம். சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் சிலவற்றில் சார்பு ஆபத்து (risk of bias) குறைவாகவும், மற்றவற்றில் தெளிவற்று அல்லது அதிகமாக இருந்தது. ஒரு தரம் குறைந்த ஆய்வு இரவில் சிம்பு அணிவது எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாதவர்களை ஒப்பிடும் போது குறுகிய காலத்தில் அதிக முன்னேற்றம் பெற வழிவகுக்கிறது என்று அறிவுறுத்துகிறது. ஆனால், ஒரு சிம்பு வடிவமைப்பு அல்லது முறையான சிகிச்சை திட்டம் அணிதல் வேறொன்றைவிட மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றோ சிம்பு அணிதல் CTS க்கான பிற அறுவைசிகிச்சை அல்லாத தலையீடுகளை விடவும் திறனானது என்றோ ஆதாரங்களில் இருந்து எங்களால் சொல்ல முடியவில்லை. ஒன்பது சோதனைகள் சிம்பு வைக்கப்பட்டதன் எதிர்மறை விளைவுகளை அளவிட்டு எதிர்மறைவிளைவு ஒன்றும் இல்லை என்றும் அல்லது சில பங்கேற்பாளர்களுக்கு உபாதைகள் இருந்தது அல்லது சிம்பு வைக்கப்பட்டதால் வீக்கம் ஏற்பட்டது என்றும் கண்டறிந்தது. மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு உள்ளவர்களுகளுக்கு சிம்பு அணிதல் சிகிச்சை குறிப்பாக நீண்டகால அடிப்படையில் எவ்விதத்தில் திறனானது மற்றும் பாதுகாப்பானது என்று கண்டுப்பிடிக்க மேலும் ஆராய்ச்சிகள் தேவை.
மொழியாக்கம்: க. ஹரிஓம் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு