கடுமையான (acute) ஆக்சிஜன் குறைவினால்(இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும்) ஏற்படும் பக்கவாதத்திற்கு வாய்வழி உட்கொள்ளும் எதிர் இரத்த வட்டு சிகிச்சை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

கேள்வி

கடுமையான (acute) குறுகிய கால இரத்த ஓட்ட தடை காரணமாக நிகழும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம், வாய்வழி உட்கொள்ளும் குருதித்தட்டுக்கு எதிரான மருந்துகளின் நீண்ட கால விளைவுகள், இறப்பு எண்ணிக்கையை குறைத்தல், திறன் மற்றும் அபாயமின்மையை போலிமருந்து சிகிச்சை மற்றும் சிகிச்சையின்மை ஆகியவற்றோடு ஒப்பிட்டு கண்டறிய விரும்பினோம்.

பின்புலம்

பெருவாரியான பக்கவாதம் மூளையில் உள்ள ஏதேனும் தமனியில் இரத்த உறைவின் காரணமாக அடைத்துகொள்வதால் ஏற்படுகிறது. (ஆக்சிஜன் குறைவினால் ஏற்படும் பக்கவாதம்) அஸ்பிரின் போன்ற இரத்த வட்டுஎதிர் மருந்துகளினால் சிகிச்சை அளிக்கையில் புதிய கட்டிகள் உருவாகாமல் தடுத்து அதன்மூலம் நோய் குணமாவதை துரிதப்படுத்த உதவுகிறது. எனினும், குருதித்தட்டுக்கு எதிரான சிகிச்சை காரணமாக மூளையில் ரத்த கசிவு ஏற்படக்கூடும். இது எந்த நலனடைவையும் ஈடுகட்டி எதிர் மறைவு விளைவை தரக்கூடியது.

ஆய்வு பண்புகள்

அக்டோபர் 2013 வரை உள்ள எட்டு சான்றுகள் ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டன . இந்த ஆய்வுகள் மொத்தமாக 41,483 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியவை. இதில் இரண்டு ஆய்வுகள் 98% அடிப்படை விவரங்களை தந்தன . நான்கு ஆய்வுகள் அஸ்பிரினையும், மூன்று ஆய்வுகள் டிக்லோபிடினையும் மற்றுமொரு ஆய்வு அஸ்பிரின் மற்றும் டிபிரிடமோல் ஆகியவற்றின் கூட்டு விளைவுகளையும் சோதனை செய்தன . ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் 70 வயதை தாண்டிய முதியோர் ஆவர். ஆண்கள் மற்றும் பெண்கள் சமச்சீர் விகிதமாக ஆய்வில் பங்கேற்றனர். நிர்ணயிக்கப்பட்ட சிகிச்சையின் கால அவகாசம் ஐந்து நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரையும், பின் தொடர் காலத்தின் கால அளவு பத்து நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரையும் மாறுபட்டு காணப்படுகிறது.

முக்கிய முடிவுகள்

பக்கவாதத்தின் அறிகுறிகள் தென்படக்கூடிய 48 மணி நேரத்துக்குள் அஸ்பிரினை 160 mg முதல் 300 mg என்ற அளவில் உட்கொண்டால் அது உயிரை பாதுகாப்பதோடில்லாமல் முதல் இரண்டு வாரங்களுக்கு மேலும் பக்கவாதம் தாக்குவதை தடுக்கிறது. பக்கவாதம் தொடங்கி 48 மணி நேரத்துக்கு மேலானால், 14 நாட்களுள் உட்கொண்டால், இந்த காலதாமதமான நிலையிலும் அஸ்பிரின் பயன் தரக்கூடியது என்று இந்த திறனாய்வின் வரையறுக்கப்பட்ட சான்றுகளும் வெளி தரவுகளும் தெரிவிக்கின்றன. உயிரோடு வாழ்வதற்கான சாத்திய கூறுகளையும், மேலும் பக்கவாதத்தில் இருந்து சார்பில்லாமல் முன்னேறுவதற்கான வாய்ப்பினையும் அஸ்பிரின் அதிகரிக்கிறது. தீவிர ரத்தப்போக்கிற்கான அபாயமும் மிகவும் குறைவாகவே தெரிகிறது. இந்த திறனாய்வில் மதீப்பீடுக்கு உட்படுத்தப்பட்ட மற்ற எதிர்குருதிதட்டு சிகிச்சை மருந்துகள் (க்லோபிடோக்ரேல், டிக்லோபிடின், சிலோஸ்டசால், சடிக்ரேல், சர்போல்ககிறேலேட், KBT 3022, இஸ்போக்ரேல்) பற்றிய எந்த நம்பகத்தன்மை உடைய ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

சான்றின் தரம்

இந்த முடிவுகளுக்கு காரணமாக விளங்கிய சான்றுகளின் ஆதாரம் பொதுவாக நன்றாக இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கோ.ஷங்கர் கணேஷ் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு