பெரியவர்களுக்கு உள்ள கணுக்கால் எலும்பு முறிவுகளுக்கான புனர்வாழ்வு

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

கணுக்கால் எலும்பு முறிவு என்பது குறிப்பாக வயதான பெண்கள் மற்றும் இளம் வயதையுடைய ஆண்கள் மத்தியில் பொதுவாக உள்ள கால் எலும்பு முறிவுகளுள் ஒன்றாகும். பொதுவாக, அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை அல்லாத முறையில், இதற்கு சிகிச்சை அளிக்கப்படும், இதை தொடர்ந்து, எழும்பு கூடற்கேடு போன்ற சிக்கல்களை தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதி சில காலம் அசைவற்ற நிலையில் வைக்கப்படும். எலும்பு முறிவு மற்றும் அதைத் தொடர்ந்து சிலக்காலம் அசைவற்ற நிலையில் இருப்பது நிமித்தமாகவும் , மக்கள் பெரும்பாலும் வலி, விறைப்பு, பலவீனம் மற்றும் கணுக்காலில் வீக்கம், மேலும் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு குறைந்த திறன் போன்றவற்றை அனுபவிப்பர். இத்தகைய எலும்பு முறிவுக்கான வெவ்வேறு வகையான புனர்வாழ்வு தலையீடுகளின் பயன் மீதான ஆதாரங்களை இந்த திறனாய்வு கண்ணோக்கியது .

எலும்பு முறிவிற்கான அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை அற்ற முறை செய்யப்பட்டவுடன், எடை தங்குதல் அல்லது உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றிக்கு இடமளிக்கும் பல்வேறு அசைவற்ற முறைகளை பயன்படுத்தி அளிக்கப்படும் , கணுக்கால் எலும்பு முறிவிற்கான புனர்வாழ்வை விரைவாக தொடங்கலாம். மாறாக, அசைவற்ற முறையிலான சிகிச்சை காலத்தை தொடர்ந்து, உடல் ரீதியான அல்லது கையாள்கை சிகிச்சைகளை உள்ளடக்கிய புனர்வாழ்வு சிகிச்சைகளை தொடங்கக்கூடும்

மொத்தம் 1,896 பங்கேற்பாளர்களைக் கொண்ட முப்பத்தெட்டு ஆய்வுகள் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. சோதனைகளுள் பல, ஒருதலை சார்பிற்கான சாத்தியத்தை கொண்டிருந்தது.

மூன்று ஆய்வுகள்,அறுவை அற்ற சிகிச்சைக்கு பிறகு அசைவற்ற சிகிச்சை காலத்தின் போது தொடங்கிய புனர்வாழ்வு தலையீடுகளை ஆய்வு செய்தது. மாவுக்கட்டு அல்லது சிம்புகட்டு மூலம் எலும்பை அசைவற்ற நிலையில் வைப்பதைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட வகையான கட்டு, குறுகிய கால நன்மை அளிக்கிறது என்பதற்கு சில மிகவும் குறைவான ஆதாரங்கள் உள்ளன. அறிதுயில் நிலைக்கான எந்த ஆதாரமும் இல்லை.

முப்பது ஆய்வுகள், அறுவை சிகிச்சைக்குப் பிறகான அசைவற்ற சிகிச்சை காலத்தின் போது ,தொடங்கிய புனர்வாழ்வு தலையீடுகளை ஆய்வு செய்தது. இவற்றுள் பத்து ஆய்வுகள், கழற்றி வைக்கக் கூடிய வகையை சார்ந்த கட்டுகளின் பயன்பாட்டையும் அதோடுக் கூட வெறும் மாவுக்கட்டுடன் கூடிய உடற்பயிற்சியையும் ஒப்பிட்டது. இதிலிருந்து, அசைவற்ற சிகிச்சை காலத்தின் போது, மென்மையான கணுக்கால் பயிற்சிகளை செய்யும்படிக்கு கழற்றிவைக்கக் கூடிய கட்டு அல்லது செம்புக்கட்டை உபயோகித்தல் வழக்கமான நடவடிக்கைகளுக்கு திரும்புவதை மேம்படுத்தவும் ,வலியை குறைத்து கணுக்கால் அசைவை மேம்படுத்தவும் உதவலாம் என்பதற்கு சில ஆதாரம் இருக்கிறது. ஆயினும்,தீய நிகழ்வுகளுக்கான சந்தர்ப்பமும் (அறுவை சிகிச்சை காயம் போன்ற பிரச்சினைகள் )அதிகரிக்கலாம். சீக்கிரமாக நடக்க தொடங்குவதும் கூட கணுக்கால் இயக்கத்தை மேம்படுத்தக்கூடும் . ஒரு சிறிய ஒரு தலை சார்புடைய ஆய்வானது நரம்பு தூண்டுதல் (ந்யுரோ ஸ்டிமுலேசன்) என்ற ஒரு மின்னாற்றல் நடைமுறை குறுகிய கால நன்மையளிக்கலாம் என்று காட்டியது . எந்த வகையான ஆதரவு அல்லது அசைவற்ற சிகிச்சைமுறை சிறப்பானது என்பதற்கு குறைவான அல்லது முடிவுறாத ஆதாரங்கள் இருந்தன.

ஐந்து ஆய்வுகள் ,அசைவற்ற சிகிச்சைக் காலத்திற்கு பிறகு தொடங்கிய புனர்வாழ்வு தலையீடுகளை ஆய்வு செய்தது. தசை நீட்டல் அல்லது கையாள்கை சார்ந்த சிகிச்சைகள், இவைகளுள் எவற்றை உடற்பயிற்சி திட்டத்தோடு சேர்த்தாலோ அல்லது ஒரு உடற்பயிற்சி திட்டத்தை வழக்கமான பராமரிப்போடு ஒப்பிட்டாலோ மேம்பட்ட இயக்கத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஒருதலை சார்புக்கான வாய்ப்புடைய ஒரு சிறிய ஆய்வானது வெப்பமற்ற மின் சிற்றலைகளை, தடைபட்ட வெப்பமூட்டும் மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் வெப்பம் சாராத சிகிச்சைக்குப் பிறகு கணுக்கால் வீக்கம் குறைக்கப்பட்டதை கண்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.