கீல்வாதம் உள்ள நோயாளிககளில், முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு சிகிச்சை தலையீடாக அளிக்கப்படும் குளிர் சிகிச்சை முறையின் விளைவுகளை குறித்து ஆய்வுகள் மூலம் நாங்கள் அறிந்து கொண்டதை இந்த காக்குரேன் மறு ஆய்வுரை சுருக்கம் வழங்குகிறது.
முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்களில் கீழ்க்கண்டவற்றை இந்த ஆய்வுரை கண்டது:
- குளிர் சிகிச்சை முறை, இரத்த இழப்பு மற்றும் வலியின் அளவை சிறிதளவு குறைக்கக்கூடும்.
-குளிர் சிகிச்சை முறை, பொதுவாக பாதுகாப்பானதாகவும் மற்றும் எந்தவொரு ஆபத்தான எதிர் விளைவுகளோடும் தொடர்பற்றதாகவும் இருந்தது.
-அறுவை சிகிச்சைக்கு பின் வரும் முதல் இரண்டு வாரங்களில், குளிர் சிகிச்சை முறை முழங்கால் இயக்கத்தின் வரம்பை அதிகரிக்கக் கூடும்.
-ஒரு நபரின் முழங்கால் செயல்பாட்டோடு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்(அல்லது வாழ்க்கை தரம், அல்லது பொது செயல்பாடு நிலை) மீதான குளிர் சிகிச்சை முறையின் விளைவுகளை பார்த்த எந்த ஆய்வுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
முழு முழங்கால் மாற்று சிகிச்சை மற்றும் குளிர் சிகிச்சை முறை என்றால் என்ன?
கீல்வாதம் என்பது உங்கள் முழங்கால் போன்ற மூட்டுகளை தாக்கும் நோயாகும். முழங்கால் கீல்வாதம் உங்கள் முழங்கால் மூட்டை வலிக்குள்ளாகி மற்றும் அதன் செயல்பாட்டை தடை செய்யக் கூடியதாகும். இந்நிலையில், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை நீண்ட காலத்திற்கு உதவக்கூடிய ஒரு சிகிச்சையாகும். ஆனால் நோய் மீட்டெழுதல் காலத்தில் அறுவை சிகிச்சையின் விளைவுகள் (அதாவது முதல் ஆறு மாதங்கள் வரை) பலவீனமாக்குவதாக உள்ளது. குளிர் சிகிச்சை முறை (அல்லது கிரயோதெரபி) என்பது ஒரு காயம் அல்லது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை சுற்றியுள்ள தோலின் மீது பிரயோகிக்கப்படும் மிகக்குறைந்த வெப்பநிலை பயன்பாட்டை உள்ளடக்கியதாகும். பனிக்கட்டி பைகள் மூலமாகவோ அல்லது குளிர்ந்த தண்ணீரை அப்பகுதிக்கு வழங்கக்கூடிய சிறப்புச் சாதனங்கள் மூலமாகவோ இதனை செய்யலாம்.
முழு முழங்கால் மாற்று சிகிச்சைக்கு பின் வரும் முதல் சில நாட்களில், குளிர் சிகிச்சை முறையானது வலியை குறைப்பதோடு முழங்காலின் இயக்க வரம்பை அதிகரிக்கக் கூடும் என்பதிற்கு சான்று உள்ளது என்று இந்த ஆய்வுரை காட்டுகிறது. ஆயினும் குளிர் சிகிச்சை முறையின் பயன்பாடு இரத்த ஏற்றலின் தேவையைக் குறைக்கவில்லை. குளிர் சிகிச்சை முறையின் பயன்பாடு பாதுகாப்பானது, மற்றும் தீவிர சிக்கல்களின் அதிகரிப்பை விளைவிக்கவில்லை .
முழு முழங்கால் மாற்று சிகிச்சையை மேற்கொண்டு குளிர் சிகிச்சை முறை பெறும் மக்களுக்கு என்ன நிகழும் என்பதற்கான சிறந்த கணிப்பு:
இரத்த இழப்பு
- குளிர் சிகிச்சை முறை பெற்றுக் கொண்டவர்களுக்கு, அதை பெறாதவர்களை விட சராசரியாக 225 மில்லி லிட்டர் அளவு குறைவான இரத்த இழப்பு இருந்தது.
வலி
- குளிர் சிகிச்சை முறையை பெற்றுக் கொண்டவர்கள், அறுவை சிகிச்சைக்கு பின் 2-ஆம் நாளில் குறைவான வலியை பதிவு செய்தனர், சராசரியாக, 0 முதல் 10-க்குள்ளான அளவீட்டில், 1.3 புள்ளிகள் குறைவாக பதியப்பட்டது. ஆனால், 1-ஆம் மற்றும் 3-ஆம் நாட்களில் வலி அளவுகள் எந்த வேறுப்பாட்டையும் காட்டவில்லை.
எதிர் நிகழ்வுகள் (அசௌகரியம், ஓரிட தோல் வினைகள், தோல் தொற்று, குளிர் தொடர்பான காயங்கள் மற்றும் இரத்த கட்டிகள் உள்ளிட்ட தேவையற்ற விளைவு)
- குளிர் சிகிச்சை முறையை பெற்ற 1000 பேர்களில், 34 பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேவையற்ற விளைவுகளை அனுபவித்தனர்.
- குளிர் சிகிச்சை முறையை பெறாத 1000 பேர்களிலும், 34 பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேவையற்ற விளைவுகளை அனுபவித்தனர்.
இயக்க வரம்பு
-மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நேரத்தில், குளிர் சிகிச்சை முறையை பெற்றவர்களால் 11 கோணத்திற்கு மேலாக தங்கள் முழங்காலை மடக்க முடிந்தது.
இரத்த ஏற்றல் விகிதம் (அறுவை சிகிச்சைக்கு பிறகு தேவைப்படும் இரத்த ஏற்றம்)
- இது, குளிர் சிகிச்சை முறையை பெற்ற நோயாளிகளில் குறையவில்லை.
செயல்பாடு
-குளிர் சிகிச்சை முறையினால் முழங்கால் செயல்பாட்டின் மேல் ஏற்படும் விளைவுகள் பற்றி எந்த ஆதாரமும் காணப்படவில்லை.
மொழிபெயர்ப்பு: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி. இந்த மொழிபெயர்ப்பு குறித்த கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: atramalingam@gmail.com (அல்லது) cynthiaswarnalatha@gmail.com